பக்கம் எண் :

105

     

கண்ணையுடையளாய்; கண்கலுழ் நீரான் ஆப்பி மெழுகும் - தன் கண்
கலுழ்கின்ற நீராலே சாணாகத்தைக் கொண்டு மெழுகுகின்றாள், எ - று.


     மெழுகுமளவாயிற்றென்றது பொருளென வுரைக்க. மன்: கழி
வின்கண் வந்தது. இது கண்டார் நிலையாமை கூறி இரங்கியவாறு.

     விளக்கம்: ஆரல்மீன்   கூரிய   மூக்கினையுடையதாகலின்,
அதனைக் “கதிர்மூக்காரல்”  என்றார்.  நீர்க்கீழ்ச்  சேற்றிற் புதைந்து
கிடப்பது அதற்கியல்பு. “அள்ளல் நாரை  யாரல்  வாரு  மந்தணா
ரூரென்பதே” (திருஞான. 237:6) எனச் சான்றோர் கூறுவது காண்க.
வாளை மீனின் மீசை ஈண்டுக் கோடெனப்பட்டது. “கணைக்கோட்டு
வாளைக் கமஞ்சூல் மடநாகு”(குறுந். 164) என்று பிறரும் கூறுவர். எரிப்பூ,
எரிபோலும் நிறத்தையுடைய தாமரைப்பூ. நெரித்தலாவது, சேறு பிறழக்
குழப்புதல். அரித்த குரலையுடையதாமரைப்பூ. நெரித்தலாவது, சேறு
பிறழக் குழப்புதல். அரித்த குரலையுடையதடாரிப் பறையோசை “ஒலி
நிரம்பா ஓசை” யெனப்பட்டது; கம்புட் கோழியின் குரல்போலும் ஓசை
அரிக் குரலோசை யெனவுணர்க; “வெண்ணுதற் கம்புள் அரிக்குரற்
பேடை” (ஐங். 85) என்று சான்றோர் வழங்குப. “இன்று” என்றதற்கேற்ப
“முன்” னென்பது வருவிக்கப்பட்டது. “ஆறிய கற்பின் அடங்கிய சாயல்”
(பதிற். 16) என்றாற் போல அடங்கிய கற்புக் கூறப்பட்டது. இப்பாட்டின்
இடையே சில சொற்களும், அவற்றிற்குரிய உரையும் சிதைந்திருக்கின்றன.
பகலிடம்  முன்  ஒரு   வழிப்பட்டன்று;   இன்று  மெழுகுமளவிலே
முடிந்தது என முடித்துக் கொள்க என்பார், “மெழுகுமள வாயிற்றென்றது
பொருளென வுரைக்க” என்றார்.

---

250. தாயங்கண்ணியார்

     தாயன் என்பார்க்கு மகளாதல் தோன்ற இவர் தாயங்கண்ணியார்
எனப்படுகின்றார். கண்ணியார் என்பது இவரது இயற்பெயர். சங்க கால
நல்லிசைப்புலமை மெல்லியலாருள் இவரும் ஒருவர். முடத்தாமக்
கண்ணியார் என்றாற்போல இவர் பெயரும் கண்ணியாரென நிற்றலின்,
இவரை ஆண்பாலராகக் கருதுவோரும் உண்டு. கணவன் மாய்ந்தானாக,
மனைவி கைம்மை மேற்கொண்டு நோற்று வந்தனள். சான்றோராகிய
தாயங்கண்ணியார், அவள் கணவன் இருந்த காலத்துத் தாம் சென்றாற்
போல இக்காலத்தும் சென்றார். கைம்மை மேற் கொண்ட மனைவியும்
மக்களும் மனையின்கண் இருந்தனர். அவர்களது நெடுமனையாகிய
திருநகர்பொலிவிழந்திருந்தது. மனையாட்டியும் மழித்த தலையும் வளை
கழித்த வறுங்கையும் அல்லியரிசி யுணவும் உடையளாய் இருப்பது
தாயங்கண்ணி யார்க்கு மிக்க வருத்தத்தை யுண்டுபண்ணிற்று. அப்
பெருமனையின் பண்டை நிலையும் அவர் நினைவுக்கு வந்தது.
அவையெல்லாம் நினைத்தார்க்கு அவை ஒரு பாட்டுருவில்
வெளிப்பட்டன. அப் பாட்டு இது:

 குய்குரன் மலிந்த கொழுந்துவை யடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
5 அல்லி யுணவின் மனைவியோ டினியே