|       | |   | கதிர்மூக்             காரல் கீழ்ச்சேற் றொளிப்பக்             கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ             எரிப்பூம் பழன நெரித்துடன் வலைஞர்             அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரப் |  | 5              | பனைநுகும்             பன்ன சினைமுதிர் வராலொ |  |   | டுறழ்வே             லன்ன வொண்கயன் முகக்கும்             அகனாட் டண்ணல் புகாவே நெருநைப்             பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி             ஒருவழிப் பட்டன்று மன்னே யின்றே |  |              10 | அடங்கிய             கற்பி னாய்நுதன் மடந்தை |  |   | உயர்நிலை             யுலக மவன்புக வார             நீறாடு சுளகிற் சீறிட நீக்கி             அழுத லானாக் கண்ணள்             மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே. |  
    திணையும்         துறையு மவை...தும்பைச்சொகினனார் பாடியது.
       உரை: கதிர்         மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்ப - கதிர்          நுனைபோலும் மூக்கையுடைய ஆரல்மீன் சேற்றின்கீழே செருக;          கணைக்கோட்டு வாளை நீர் மீப் பிறழ - திரண்ட கோட்டையுடைய          வாளைமீன் நீர்மேலே பிறழ; எரிப்பூம் பழனம் நெரித்து - எரிபோலும்          நிறத்தவாகிய பூவையுடைய பொய்கைகளை நெருங்கி; உடன் - உடனே;          வலைஞர் - வலைஞரானவர்; அரிக்குரல் தடாரியின் யாமை மிளிர - ஒலி          நிரம்பா ஓசையையுடைய கிணையினது முகமேபோலும் யாமை பிறழ; பனை          நுகும்பன்ன சினை முதிர் வராலொடு - பனையினது நுகும்பையொத்த          சினைமுற்றிய வராலோடு; உறழ் - மாறுபடும்; வேல் அன்ன ஒண் கயல்          முகக்கும் - வேல்போன்ற ஒள்ளிய கயலை மகந்துகொள்ளும்; அகல்          நாட்டண்ணல் புகா - முன் அகன்ற நாட்டையுடைய குருசிலது உணவு;          நெருநை - நெருநலை நாளால்; பகல் இடம் கண்ணி - பகுத்த இடத்தைக்          கருதி, பலரொடுங் கூடி ஒருவழிப் பட்டன்றுமன் - பலருடனே இயைந்து          ஒருவழிப்பட்டது. அது கழிந்தது; இன்று-; அடங்கிய கற்பின் ஆய் நுதல்          மடந்தை - தன்கண்ணே யடங்கிய கற்பினையும் சிறிய நுதலினையுமுடைய          மடந்தை;   உயர்நிலை   யுலகம்   அவன           புக   வார -   உயர்ந்த          நிலைமையையுடைய விண்ணுலகத்தை அவன் சென்று புக அவனுக்கு          உணவு கொடுத்தல் வேண்டி; நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி - புழுதியாடிய         சுளகளவாகிய சிறியவிடத்தைத் துடைத்து; அழுதலானாக் கண்ணள் -          அழுதலமையாத  |