பக்கம் எண் :

119

     

258. உலோச்சனார்

     சோழநாட்டுச் சான்றோர்களுள் இவருள் ஒருவர். இவர் பெயர்
உலோச்சனாரென்றும் காணப்படுகிறது. இவர் நெய்தல் நிலக்கருப்
பொருள்களை நுணுகி நோக்கி இனிமையுறக் கூறுவதால் இவர் நெய்தல்
நிலத்தவராவர். சோழநாட்டு நெய்தல் நிலத்தூர்களுள் பொறையா றென்னு
மூரையும் ஆங்கிருந்துஆட்சிபுரிந்த தலைவனான பெரியன் என்பானையும்
சிறப்பித்து,” பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான், பரியுடைநற்றோர்ப்
பெரியன்” (அகம்: 100) என்றும், “நற்றேர்ப் பெரியன் கட்கமழ்
பொறையாறு” (நற்: 131) என்றும் பாடியுள்ளார். கண்ப வாயில்
என்னும் ஊரை இவர் குறித்திருக்கும் நலம் கண்ட நற்றிணையுரைகாரர்
(38); இதுவே இவரது ஊராகவும் இருக்கலாம் என்று கருதுவர்.
இவர் காலத்தே சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
உரையூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்தான். அவனை இவர்ஒருகால்
சென்று கண்டார். அவனும் இவர் சேய்மை நாட்டில் இருப்பவரென
அறிந்து மணியும் பொன்னும் முத்தும் உடையும் பிறவும் நிரம்பத் தந்து
மகிழ்வித்தான். இவ்வண்ணம் சிறப்புற்று விளங்கிய இவர், ஒருகால்
ஒரு தலைவன் பகைவர் நாட்டிற்குச் சென்று அவர்தம் நிரைகளைக்
கவர்ந்துவந்த திறத்தைக்கண்டார். அவன் மறுபடியும் வேற்று
நாட்டிற்கு நிரை கவரச்செல்வது கருதினான். அது குறித்து வீரரிடையே
உண்டாட்டு நிகழ்ந்தது. உலோச்சனாரும் ஆங்கே இருந்தார்.
அவர்வீரருக்குக் கள் வழங்குவோனைப் பார்த்துக் கூறுவது போல
“கள்வழங்குபவனே, முன்பு இத்தலைவன் கந்தார நாட்டிற்குட்
புகுந்துநிரை கவர்ந்து கொணர்ந்து கள் விலைக்கு ஈடாக வழங்கினன்:
இன்றும் அவ்வாறே செல்லச் சமைந்துள்ளான்; சென்றுள்ளானெனவே
கூறலாம். நின்பால் உள்ள கள்ளை வழங்குவாயாயின் முடிவில் அவற்கு
இல்லையாய்விடும்; அவன் ஆனிரைகளைக் கொணருங்கால்,விடாய்
மிக வுடையனாவன். அப்போதுவழங்குதற்கு முதுகட்சாடி யொன்றைப்
பேணி வைப்பாயாக” என்று இப்பாட்டைப் பாடினார்.

 முட்காற் காரை முதுபழ னேய்ப்பத்
தெறிப்ப விளைந்த தேங்கந் தாரம்
நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு
பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த
5எச்சி லீர்ங்கை லிற்புறத் திமிரிப்
 புலம்புக் கனனே புல்லணற் காளை
ஒருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை
ஊர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும்
தொடுத லோம்புமதி முதுகட் சாடி
10ஆதரக் கழுமிய துகளன்
 காய்தலு முண்டக் கள்வெய் யோனே.

   திணையும் துறையு மவை...உலோச்சனார் பாடியது.

     உரை: முட்கால் காரை முதுபழன் ஏய்ப்ப - முட்டாளை
யுடையகாரையினது முதிர்ந்த பழத்தை யொப்ப; தெறிப்ப விளைந்ததேம்