பக்கம் எண் :

128

     
15நிரையிவட் டந்து நடுக லாகிய
 வென்வேல் விடலை யின்மையிற் புலம்பிக்
கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழிகல மகடூஉப் போல
புல்லென் றனையாற் பல்லணி யிழந்தே.

   திணையும் துறையு மவை...ஆவூர் மூலங்கிழார் பாடியது.

     உரை: அந்தோ-;  எந்தை  அடையாப்  பேரில் - என்னிறைவனது
அடையாத பெரிய இல்லே; வண்டுபடு நறவின் தண்டாமண்டையொடு -
வண்டுகள்  படியும்  மதுவினால்  ஒழியாத  மண்டையுடனே;  வரையாப்
பெருஞ்சோற்று முரிவாய் முற்றம் யாவர்க்கும் வரையாமல் வழங்கும் மிக்க
சோற்றையுடைய  முரிந்த  குறட்டையுடைத்தாகிய முற்றம்; வெற்று யாற்று
அம்பியின்  எற்று - நீரற்று  யாற்றின்  ஓடம்  எத்தன்மைத்து;  அற்றாக
கண்டனென்  மன்ற - அத்தன்மைத்தாகக் கண்டேன் நிச்சயமாக; என் கண்
சோர்க - என் கண்மணி சோர்ந்து வீழ்வனவாக; வையங் காவலர்
வளங்கெழு திருநகர் - உலகத்தைக்காக்கும் வேந்தருடைய செல்வமிக்க
திருநகரின்கண்; மையல்யானை  அயா  வுயிர்த்தன்ன - மதத்தான் 
மயங்கிய  யானை உயங்குதலான் நெட்டுயிர்ப்புக் கொண்டாற் போன்ற;
நெய்யுலை சொரிந்த மையூன்  ஓசை - நெய்  காய்கின்ற  உலையின்கண்
சொரியப்பட்ட ஆட்டிறைச்சியினது ஓசையையுடைபொரியலை; புதுக்கண்
மாக்கள் செதுக்கண் ஆர - புது மாந்தருடைய ஒளிமழுங்கிய கண்கள்
நிறைய; பயந்தனை முன்மன்- உண்டாக்கினாய் முன்பு அது கழிந்தது;
இனியே - இப்பொழுது; பல் லா தழீஇய - பல  ஆனிரையைக் 
கைக்கொண்ட; கல்லா  வல்வில் - கற்கவேண்டாத வலிய விற்படையை;
உழைக்குரல் கூகை அழைப்ப-தன்னிடத்தே குரலையுடைய கூகை தன்
இனத்தை அழைக்கும்படி; ஆட்டி -அலைத்து; நாகு முலையன்ன -
நாகனிது முலை போன்ற; நறும் பூங் கரந்தை- நறிய   புவையுடைய
கரந்தையை;  விரகறியாளர்  மரபின ் சூட்ட - அறிவுடையோர் சூட்டும்
முறைமையிலே சூட்ட; நிரை இவண் தந்து - நிரையை இவ்வூரின்கண் மீட்டுத்
தந்து; நடுகல் ஆகிய வென்வேல் விடலை இன்மையின் - நடப்பட்ட
கல்லாகியவென்றி வேலையுடைய இறைவன் இல்லாமையால்;  புலம்பி  -
தனித்து;  கொய்ம்மழித் தலையொடு - கொய்யப்பட்ட மொட்டையாகிய
தலையுடனே; கைம்மை உறக் கலங்கிய கைம்மை நோன்பு மிகக்
கலக்கமுற்ற;
கழிகல மகடூஉப் போல- ஒழிக்கப்பட்ட அணிகலத்தையுடைய
அவன் மனைவியை யொப்ப; புல்லென்றனை பல்லணி இழந்து -
பொலிவழிந்தனை பல அழழும் இழந்து; எ - று.