பக்கம் எண் :

127

     

261. ஆவூர் மூலங்கிழார்

     பாண்டி நாட்டில் மல்லியைத் தலைநகராகக் கொண்ட சிறு
நாடுமல்லி நாடெனப்படும். அதற்குரிய தலைவன் காரியாதி யென்னும்
பெயரினன். அவன்பால் ஆவூர் மூலங்கிழார் பேரன்புடையவர். ஒருகால
அவர் அவன் நெடுமனைக்குச் சென்றிருந்தார். அவன்தன்பால் வருபவர்க்குத்
தடையின்றி வரவேற்பு நல்கி நல்லவுணவளித்துச் சிறப்புச் செய்தான் .
அதனைக் கண்ட ஆவூர்மூலங்கிழார்க்கு வியப்பு மிகுந்தது. அவனைப்
புகழ்வாராய் அவனது நெடுமனையின் சிறப்பை இனிய பாட்டொன்றில்
சிறப்பித்தார். பின்பு அவன் தந்த மிக்க பரிசிலைப் பெற்றுத் தமதுஊரை
யடைந்தார் ஆவூர் மூலங்கிழார். பல நாட்குப்பின் அவர்காரியாதி யுறையும்
மல்லிக்குச் சென்றார். இடையில் நிகழ்ந்ததுஅவர்க்குத் தெரியாது.
காரியாதியின் பகைவர் அவனூர் ஆரிரைகளைக் கவர்ந்து சென்றனர்.
அதுகேட்ட காரயாதிவிரைந்து சென்று அவரோடு போருடற்றி அந்த
நிரைகளை மீட்டுக் கொணர்ந்து மேம்பட்டான். ஆயினும், பகைவர்
அவன்மேல் எறிந்த படைகள் அவற்கு இறுதியை விளைத்தன.
ஊரவர் அவனது பெறலரும் பீடும் பெயரும் நடு கல்லிற் பொறித்து
நட்டு வழிபட்டனர். இது நிகழ்ந்த பின்பே ஆவூர் மூலங்கிழார்
மல்லிக்கு வந்ததாகும். அதனால் மனம் புண்பட்டு வருந்தியவர்
காரியாதியின் பெருமனை பொலிவிழந்து தோன்றுவது கண்டு இந்தப்
பாட்டினைப் பாடினார். காரியாதியின் பெயர் ஏடுகளிற் சிதைந்து
போயிற்று. கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டில் கரந்தைப் போரில்
நிரைமீட்டுப்பட்டான். ஒருவன் நடுகல் “தஞ்சை கொண்டகோப்பரகேசரி
பன்மர்க்கு யாண்டு 3-வது: கற்பூண்டி நாட்டுஅத்தீயூர் கரம்பை,
கலிதொடான்” முக்கண் அணியன் தொறுக்கொள (அத்) தொறு
மீட்டுப்பட்டான்.” (A.R. for 1935-6. பக்.72) எனவருவது பண்டைநாளில்
நடுகல்லிற் பீடுபெற எழுதிய திறத்தை எடுத்துக்காட்டுகிறது.
தஞ்சைகொண்ட பரகேசரி விசயாலயன் என்னும் சோழவேந்தன்.

 அந்தோ வெந்தை யடையாப் பேரில்
வண்டுபடு நறவிற் றண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
வெற்றியாற் றம்பியி னெற்றற் றாகக்
5கண்டனென் மன்ற சோர்கவென் கண்ணே
 வையங் காவலர் வளங்கெழு திருநகர்
மையல் யானை யயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூ னோசை
புதுக்கண் மாக்கள் செதுக்க ணாரப்
10பயந்தனை மன்னான் முன்னே யினியே
 பல்லா தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை யழைப்ப வாட்டி
நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
விரகறி யாளர் மரபிற் சூட்ட