விரகு நுண்ணறிவுடையார்பால்உளதாகலின் விரகறியாள ரென்றதற்கு அறிவுடையோர் என வுரைத்தார். நிரை கவரச் செல்வார்க்கு வெட்சியும், மீட்போர்க்குக் கரந்தையும் சூடுவது மரபாதலால், கரந்தை சூடிப் பொருது வென்று வந்தார்க்குக் கரந்தை சூட்டுதலை, மரபிற் சூட்ட என்றார். காரியாதி இறக்குங்கால் முதுமை யெய்தினவனல்லன் என்பதற்கு வென் வேன் வேல் விடலை என்றார். கலங்கிய மகடூஉ, கழிகல மகடூஉ என்க. கணவனையிழந்தமையால் அணிகலன்களைத் துறந்து நிற்பதுபற்றி கழிகல மகடூஉ என்றார். பேரில்லினும் கலங்கழிந்து நிற்கும் மகளிரது நிலை பொலி விழப்பினை விளங்கக் காட்டுதலால், கழிகல மகடூஉப்போல என உவமையின் வைத்தோதினார். செதுக்கணார வென்பதற்கு வேறு வகையிலும் பொருள் கூறலாமென்பதற்கு, செதுக்கணார...என்றுமாம் என்றார். ---
262. மதுரைப்பேராலவாயார் ஒருகால் மதுரைப்பேராலவாயார் என்னும் சான்றோர் தாம் அறிந்த தலைவனொருவனைக் காணச் சென்றிருந்தார். அக்காலை அவன் பகைவர் நாட்டுட் சென்று அவர்தம் நிரைகளைக் கவர்ந்துவரச் சென்றிருந்தான். அவன் வரவு நோக்கிப் பேராலவாயார் அங்கே தங்கியிருந்தார். சிறிது போதில் அவன் தன்னொடு போந்த துணைமறவர் புடை சூழப் பகைவர்பால் கவர்ந்த ஆனிரையுடன் திரும்பி வந்தான். மக்கள் பேராரவாரத்துடன் அவனை வரவேற்றனர். அச்சிறப்புக்குறித்து அங்கே உண்டாட்டு நிகழ்ந்தது. அதன்கண் சிறப்புடையோர் சிலர் உண்டாட்டுக்குரிய இடத்தை ஒப்பனை செய்தற்கும் நறவு முதலிய உணவுப் பொருள்களை யமைப்பதற்கும் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவரிடையே நிகழ்ந்த பேச்சுக்கள் நம் சான்றோராகிய மதுரைப் பேராலவாயார் புலமைக்கு நல்விருந்தாயின. அதன் பயனாக இப் பாட்டு எழுந்தது. | நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப் புனறரு மிளமண னிறையப் பெய்ம்மின் ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று | 5 | நிரையொடு வரூஉ மென்னைக் | | குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே, |
திணை: வெட்சி. துறை: உண்டாட்டு; தலைத்தோற்றமுமாம்...மதுரைப்பேராலவாயார் பாடியது.
தலைத் தோற்றமாவது, உரவெய்யோ னினந்தழீஇ,வரவுணர்ந்து கிளைமகிழ்ந்தன்று, (பு.வெ.மா.வெட்சி. 12)
உரை: நறவும் தொடுமின் - மதுவையும் அலைத் துண்ணும்படி பிழிமின்;விடையும் வீழ்மின் - ஆட்சி விடையையும் படுமின்; பாசுவல் இட்ட புன்கால் பந்தர் - பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண்; புனல் தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின் - நீர்கொழித்துக் கொடுவரப் பட்ட |