இவர் மகட்பாற் காஞ்சியை விரும்பிப் பாடியுள்ளார். ஈண்டுக் காணப்படும் இவரது பாடாண்பாட்டு ஏடுதோறும் சிதைந்து காணப்படுகிறது. அழும்பில் என்னும் ஊரையும் கோசரது அவைக் களத்தையும் இப் பாட்டிகட்குறித்துள்ளார். இது புதுக்கோட்டைப் பகுதியில் உளது; இப்போது அம்புக் கோயில் என வழங்குகிறது; இங்குள்ள கல்வெட்டு இராஜராஜ வளநாட்டுப் பன்யியூர் நாட்டு அழும்பில்(p. s. Ins. 458)என்று குறிக்கிறது. ஒருவன் பகைவர் எறிந்த வேல் தைத்துத் தங்கிய மார்புடனே, வண்டியின் ஆழிக்குடம் தன்பாற் செருகிய ஆர்க்காலொடு நின்றாற்போல உயிரிழக்கும் நிலையை யெய்த அவன் துணைவன் தும்பை சூடிப் போர்க்கெழுதலை இதன்கண் உரைக்கின்றார். இப் பாட்டு இடையிடையே சில அடிகள் சிதைந்துளது.
| ஒண்செங் குரலித் தண்கயங் கலங்கி வாளை நீர்நாய் நாளிரை பெறூஉப் பெறாஅ வுறையரா வராஅலின் மயங்கி மாறுகொண் முதலையொ டூழ்மாறு பெயரும் | 5 | அழும்பில னடங்கான் றகையு மென்னும் | | வலம்புரி கோச ரவைக்களத் தானும் மன்று ளென்பது கெட...தானே பாங்கற் கார்சூழ் குறட்டின் வேனிறத் திங்க உயிர்புறப் படாஅ வளவைத் தெறுவரத் | 10 | தெற்றிப் பாவை திணிமண லயரும் | | மென்றோண் மகளிர் நன்று புரப்ப இமிழ்ப்புற நீண்ட பாசிலைக் கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே. |
திணை: தும்பை. துறை: பாண்பாட்டு. அண்டர்நடுங்கல்லினார் பாடியது.
உரை: ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி - ஒள்ளிய செங்குரலிக்கொடி நிறைந்த தண்ணிய நீர்நிலை கலங்க; வாளை நீர்நாய் நாளிரை பெறூஉ - வாளைமீனை நீர்நாய் தன் நாட் காலை யுணவாகப் பெற்றுண்டு; பெறாஅ உறை அராஅ வராலின் மயங்கி - உணவு பெறாமல். அங்கே யுறையும் பாம்புகளை வரால் மீன் எனக் கருதி மயங்கி; மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும் அழும்பிலன் - மாறுகொள்ளும் முதலைகளோடு முறை முறை மாறுபட்டு நீங்கும் அழும்பில் என்னும் ஊரையுடையோன்; அடங்கான் தகையும் என்னும் - அடங்கானாய் எதிர் நின்று பொருவன் என்று கருதி யெழும்; வலம்புரி கோசர் அவைக்களத்தானும்- வெற்றி விரும்பும் கோசருடைய அவைக்ளத்தின் கண்ணும்; மன்றுள் என்பதுகெட...போர்க்களத்தின் நடுவிடமென்பது இல்லையாக...; |