| உரை: வாயிலோய் வாயிலோய் - வாயில் காப்போய் வாயில் காப்போய்; வள்ளியோர் செவிமுதல் வயங்கு மொழிவித்தி- வண்மையுடை யோரது செவியிடத்தே விளங்கிய சொற்களை விதைத்து; தாம் உள்ளியது முடிக்கும் - தாம்நினைந்த பரிசிலை விளைக்கும்; உரன் உடை உள்ளத்து - வலியையுடைத்தாகிய நெஞ்சினையுடைய; வரிசைக்கு வருந்தும் இப்பரிசிலான் வாழும் இல் வாழ்க்கையையுடைய பரிசிலர்க்கு; அடையாவாயிலோய் - அடைாத வாயில் காப்போய்; கடுமான் தோன்றல்- விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய; நெடுமான் அஞ்சி - நெடுமானஞ்சிதான்; தன் அறியலன் கொல் -தன் தரம் அறியான் கொல்லோ; என் அறியலன் கொல் - அதுகிடக்க என் தரம்அறியான்கொல்லோ; அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென - அறிவும்புகழுடையோர்இறந்தாராக;வறுந்தலைஉலகமும் அன்றே - வறிய இடத்தையுடையது உலகமும்அன்றே; அதனால் - ஆகலான்; காவினெம் கலன் - காவினேம் கலங்களை; சுருக்கினெம்கலப்பை - கட்டினேம் முட்டுக்களை; மரம்கொல் தச்சன் மழுவுடைக் கைவர் சிறா அர் - மரத்தைத் துணிக்கும்தச்சன்பயந்த மழுவையுடைய கைத்தொழில் வல்ல மகார்;காட்டகத்துஅற்று - காட்டிடத்துக்சென்றால்அக்காட்டகம் பயன்படுமாறு அவர்க்கு எத்தன்மைத்து; எத்திசைச் செலினும் அத்திசைச் சோறு அற்று - எமக்கும் யாதொரு திசைக்கட் போகினும் அத்திசைக்கண் சோறு அத்தன்மைத்து எ - று.
கலம்யாழுமாம். உள்ளத்தையுடையபரிசிலரெனினுமமையும். மழுவென்றது வாய்ச்சியை; தறிகையுமாம். காட்டகமென்றாரேனும் கருதியது அதன்கண் மரமாகக் கொள்க பரிசிலர்க்குச் சிறாரும், கல்விக்கு மழுவும், செல்லுந் திசைக்குக் காடும், சோற்றிற்குக் காட்டுள் மரமும் உவமையாகக் கொள்க.
விளக்கம்:பரிசிலர் சொல்லேருழவராகலின், அவர்தம் சொற்களாகிய விதையைவள்ளியோர்செவியாகியபுலத்தில் விதைத்துப் பரிசிலாகிய நெல்லைவிளைவித்துக் கொள்வர் என்பது விளங்க, உள்ளியது முடிக்கும் என்றதற்கு, நினைந்த பரிசிலை விளைக்கும்என்வுரைத்தார். உலகம் அறிவும் புகழுமுடையாரையே சார்ந்து நிற்பதாகலின், அவர் மாயந்த் வழி உலகம்வறுந்தலையாம்என்பதுமேற்கோள். உலகம்வறுந்தலை யன்றெனவே,அறிவும்புகழுமுடையார் இலரல்லர்உளர்என்பது குறித்தவாறாம். நும்போல்வேந்தர்க்கரிதேயன்றிஎமக்குச் சோறு அரிதன்றென்பார், எத்திசைச்செலினும் அத்திசைச் சோறு என்றார். கைவல்சிறார் மழுவேந்திக்காட்டுட்செல்லின், அவர்க்கு மரக்குறைவு இல்லாதவாறுபோல யாமும் எம் கல்வி கொண்டு எத்திசைக்குச் சென்றாலும் எங்கட்கு உணவுக் குறைபாடு உண்டாகாதென்பதாம். ஆகவே, யாங்கள் வெறுஞ்சோறு வேண்டியன்று இப் பரிசில் வாழ்க்கை மேற்கொண்டது என்பது குறிப்பு. |