| 207. இளவெளிமான் வெளிமான் என்பவன் ஒரு சிறந்த கொடையாளி. இவன் பெயரால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் ஊர்கள் பல உள்ளன. வெளி மானல்லூர் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வெளிமானுக்குப் புலவர் முதலிய பரிசிலர்பால் பெருமதிப்பும், அவர்கட்கு அவன்பால் பேரன்பும் உண்டு. ஒருகால்பெருஞ்சித்திரனார்வறுமைத்துயர்போக்கும் முயற்சியராய் வெளிமானையடைந்தார். அவன் துஞ்சும் காலையில் இருந்ததனால் தன் தம்பி இளவெளிமானை அழைத்து இவர்க்கு வேண்டும் பரிசில் நல்குக எனப் பணித்தான்.பெருஞ்சித்திரனார் அவன்துஞ்சியபின் சென்று இளவெளிமானைக் கண்டார்.அவன் ஈத்துவக்கும் இன்பமறியாத மடவோன்; செல்வத்துப்பயன்ஈதல்என்பதுஅவர்க்குக் தெரியாது. புலவர்களால் இயற்றமிழும், பாணரால் இசைத் தமிழும், கூத்தரால் நாடகத் தமிழும் என்ற மூன்றும் வளருவன என்னும்தெளிவுஅம் மடவோனுக்குக் கிடையாது. அறிவின்மையும் செருக்கும் இளவெளிமான் கண்ணிலும் கருத்திலும் களிக் கூத்தாடின. பெருஞ்சித்திரனார் முன்பே தன் பெருமனைக்கு வந்திருந்தகை அறிந்து வைத்தும்அறியாதான்போல அவரைப் பார்த்தான். புலவரைக் காண்பார்க்குளதாகிய முகமலர்ச்சி அவன்பால்உண்டாகவில்லை. வருக எனச் சொல்லுதற்கும் அவன் வாய் வறுமையுற்றது. இரப்பவர் என்பெறினும் கொள்வரெனக்கருதியீவாரைப் போலப்பொருள் சிறிது கொணர்ந்து கொடுத்தான். வெளிமானென்னும் பெரியோனுக்குத் தம்பியென்னும் தன் தகுதியையோபெருஞ்சித்திரனாரதுவரிசையையோநோக்கிற்றிலன். பெருஞ்சித்திரனார்க்குப் பேதுறவு பெரிதாயிற்று. அறிவிலா மடவோனை யிரந்தது குற்றம்; இவனை அறிவு நெறியில் தெருட்டுவதும் நம் கடனே; அதனைப் பின்பு செய்வோம், எனத் தமக்குள்ளே நினைந்தார். இனித் தம்நெஞ்சில்எழுந்தசிவப்பைமாற்றி, நெஞ்சே,அருகில் இருப்ப இருகண்களால் கண்டு வைத்தும் காணார்போல் முகங் கசந்து நல்குவார் நல்கும் பரிசில் பெரிதாயினும், தாளாளர் விரும்பார். வருகென வரவேற்ற நல்குவதுசிறிதாயினும்ஏற்றல் தக்கது; அதுவே நம் வரிசைக்கும் தகுதி. வரிசையுடையநமக்குஉலகம் பெரிது; நம்மை விரும்பியேற்றுப் பேணும் பெரியோர் பலர் உளர். ஆளிபோல மீளிமை குன்றாத நெஞ்சே, நீ உள்ளம் உடையற்க.கனியாதபழங்கருதிஉழல்பவர்யாவரும்இரார்; எழுக, வேறிடஞ் செல்வேம் என மொழிந்து கொண்டார். அதனோடமையாது, எடுத்தார்ஏட்டையும்எழுத்தாணியையும். தாம்தம்நெஞ்சொடு நேர்ந்தவற்றை யெழுதினார்; அது சிறந்த பாட்டாயிற்று. அப்பாட்டு இது.
| எழுவினி நெஞ்சஞ் செல்கம் யாரோ பருகு வன்ன வேட்கை யில்வழி அருகிற் கண்டு மறியார் போல அகனக வாரா முகனழி பரிசில் | 5 | தாளி லாளர் வேளா ரல்லர் | | வருகெனல் வேண்டும் வரிசை யோர்க்கே பெரிதே யுலகம் பேணுநர் பலரே மீளி முன்பி னாளி போல |
|