பக்கம் எண் :

187

     

அதனால் இம்மனை மகளிர் நம்பால் பூக்களை வாங்கமாட்டார்’ என்று
கருதிப்பிறர் மனைக்கண் செல்கின்றாள்; அளியள்” என்று பூவிலைப்
பெண்டின் பொருட்டு இரங்குவாள்போல எடுத்துரைத்தாள். இது கேட்ட
நொச்சிநியமங்கிழார் வியப்பு மிகக்கொண்டு அவள் கூற்றுப் பொருளாக
இப்பாட்டைப் பாடியுள்ளார்.

 நிறப்படைக் கொல்கா யானை மேலோன்
குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை
நாணுடை மாக்கட் கிரங்கு மாயின்
எம்மினும் பேரெழி லிழந்து வினையெனப்
5பிறர்மனை புகுவள் கொல்லோ
 அளிய டானே பூவிலைப் பெண்டே.

     திணை: காஞ்சி; துறை: பூக்கோட்காஞ்சி. நொச்சிநியமங்கிழார்
பாடியது.

     உரை: நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் - குத்துக்கோற்கு
அடங்காத யானைமேலிருப்போனாகிய வள்ளுவன்; குறும்பர்க்கு எறியும்
ஏவல் தண்ணுமை - அரண் புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு
முழக்கும் பூக்கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமையொலி; நாணுடை
மாக்கட்கு இரங்கும் - போர்ப்பறை கேட்ட துணையானே புறப்படாத
நாணமில்லாத வீரர்இதனைக்கேட்டு விரையச்சென்று போர்ப்பூவைப்
பெறுமாறு ஒலியாநிற்கும்; ஆயின் - ஆதலால்; எம் மினும் பேரெழில்
இழந்து - மனைமகளிராகிய எம்மினும் பெரிய தனது எழுச்சி குன்றி;
வினையென - போர் நிகழுங் காலமாதலின் தனித்துறையும் மனைமகளிர்
இனிப் பூக்கொள்ளாரென்று கருதி; பூவிலைப் பெண்டு - பூ விற்கும்
பெண்டு; பிறர் மனை புகுவள் - பிற மகளிர் வாழும் மனைகட்குச்
செல்லுகின்றாள் போலும்; அளியள் - அளிக்கத்தக்காள்; எ - று.


     நிறப்படை - குத்துக்கோல். வலிமிக்க பட்டத்தியானை யென்றற்கு
“நிறப்படைக் கொல்கா யானை” யென்றார். தன்பால் எழும் ஒலியால்
வேந்தனால் தரப்படும் காஞ்சிப்பூவைப் பெறுமாறு வீரரைப் பணித்தலைச்
செய்தலின், “ஏவல் தண்ணுமை” என்றார். போர்க்களத்தில், பகைவரை
மேற்சென்றெறியுமாறு ஏவுவது “ஏவல் வியன்பணை” (பதிற். 39)
எனப்படும். நாணுடைமாக்கள்: எதிர்மறைக் குறிப்பு மொழி. தனிமைத்
துயருழந்து எழிலிழக்கும் எம்மினும், எம்போற்பலருடைய தொடர்பிழந்து
பூ வாணிகம் குன்றவரும் இன்னாமையும் கொண்டு பெருந்துன்பமுழத்தலின்
பேரெழிலிழந்து”என்றும். எனவே அவள் இரங்கத்தகும் நிலையினளென்பது
தோன்ற, “அளியள்” என்றும் கூறினாள். தண்ணுமை இரங்கும்; ஆயின்
பூவிலைப் பெண்டு இழந்து, வினையெனப் பிறர்மனை புகுவாள்; அளியள்
என வினைமுடிவு செய்க.

     விளக்கம்: பூக்கோட் காஞ்சியாவது “காரெதிரிய கடற்றானை,
போரெதிரிய பூக்கொண்டன்று” (பு. வெ. மா. 4:10) என வரும். நுதலிற்
பாய்ந்து