பக்கம் எண் :

200

     

301. ஆவூர் மூலங்கிழார்

     இரு வேந்தர் பெரும்படை கொண்டு பொரத் தொடங்கினர். அப்போரில்
பகை வேந்தன் பாசறையமைந்து அதனைச் சுற்றி நல்ல முள்வேலியிட்டு மிக்க
பாதுகாவலில் இருந்தான். ஏனை வேந்தன் போர் முகத்து நின்று போரை
நடத்தினான். போர் கடுமையாக நடந்ததாயினும் பகை வேந்தன் முன்
வரவில்லை. அது கண்ட தானைவீரன், பகைவேந்தன் பாசறையோரைப்
பார்த்து, “சான்றோர்களே! நும் பாசறையை முள்வேலியிட்டு அதனுள்ளே
நும்முடைய வேந்தனைமயும் களிறுகளையும் நன்கு காக்கின்றீர்கள்; எத்தனை
நாள் இவ்வாறு தங்குவதாகக் கருதுகின்றீர்கள்; எத்தனை நாள் தங்கினும்
அத்தனை நாளும் தம்மை வேல் முதலிய படையெறிந்து தாக்காதாரைத் தாம்
மேற்சென்று தாக்குவதென்பது யாங்குளது? தன்மேற் படையெறிந்த வீரர்
தனக்கு நிகரன்மையால் எங்கள் இறைவன் மேற்சென்ற அவரை எறியக்
கருதிற்றிலன். அவன் கருதுவதனை நும்மில் அறிந்துவர் யார்? அறியாது யாம்
பலராகவுள்ளேம் எனத் தருக்குதலை யொழிவீராக. இப்போது இரவாதலின்
எங்களுடைய தலைவன் பாசறைக்குச் சென்றுள்ளான். அவன் தன் வேலை
நும்முடைய வேந்தன் ஊர்ந்துவரும் யானையை யெறிதற்பொருட்டு ஏந்துவனே
தவிரப் பிறர் பொருட்டு ஏந்தும் கருத்துடையனாகத் தோன்றுகின்றானில்லை
என உணர்வீர்களாக” என்று கூறினான். அதனை ஆசிரியர் ஆவூர்
மூலங்கிழார் இப் பாட்டின்கட் குறி்த்துள்ளார்.

 பல்சான் றீரே பல்சான் றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரி னிட்ட வருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே
5முரசுமுழங்கு தானைது மரசு மோம்புமின்
 ஒளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின்
எனைநாட் டங்குநும் போரே யனைநாள்
எறியா ரெறிதல் யாவண தெறிந்தோர்
எதிர்சென் றெறிதலுஞ் செல்லா னதனால்
10அறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
 பலமென் றிகழத் லோம்புமி னுதுக்காண
நிலனளப் பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபாராட்டி
எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
15வேந்தூர் யானைக் கல்ல
 தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே.


     
திணையும் துறையு மவை: ஆவூர் மூலங்கிழார் பாடியது.