பக்கம் எண் :

201

     

     உரை: பல்சான்றீரே பல்சான்றீரே - பலசான்றவீரே பலசான்ற வீரே;
குமரி மகளிர் கூந்தல் புரைய - மணமாகாத  நலங்கனிந்த  மகளிருடைய
கூந்தல்போல; அமரில் நட்ட அருமுள் வேலி - போர் கருதி நடப்பட்ட
கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த; கல்லென் பாசறைப் பல்சான்றீரே-கல்லென
ஆரவாரிக்கும் பாசறையிலுள்ள பலசான்றவீரே; முரசு முழங்கு நும்முடைய
அரசனையும் நன்கு பாதுகாப்பீராக; ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும்
போற்றுமின் - விளங்குகின்ற உயர்ந்த கொம்புகளையுடைய நும்முடைய
களிறுகளையும் நன்கு காப்பாற்றுவீராக; எனன நாள் நும் போர் தங்கும் -
எத்தனை நாட்கள் நும்முடைய போர் இங்கே  நிகழும்;  அனை  நாள் -
அத்தனை  நாளும்;  எறியார் எறிதல் யாவணது - தன்மேற் படைகளை
எறிந்தோரையும் எங்கள் இறைவன் தனக்கு நிகராகாமையான் எகிரே
சென்று எறிவதிலன்; அதனால் - ஆதலால்; அவன் கண்ணிய பொருள்
அறிந்தோர் யார் - அவள் கருதிய பொருளை நும்முள் அறிந்தவர் யார்,
அவர் எம்முன் வருக; பலம் என்று இகழ்தல் ஒம்புமின் - யாம்
பலராகவுள்ளோம் எதை் தருக்கி  இகழ்வதை  ஒழிவீராக;  உதுக்காண்
-  இதனைப்  பார்; நிலன் அளப்பன்ன - நிலத்தைத் தாவடியிட்டளப்பது
போல; குறுநெறி நில்லா - மிகக் குறுகிய வழியிலும் நில்லாது விரைந்து
பாய்ந்தோடும்; வண்பரிப் புரவி பண்பு பாராட்டி - வளவிய செல
வினையுடைய குதிரையின் போர்ப் பண்புகளைப் புகழ்ந்துகொண்டு;
எல்லிடைப் படர்தந்தோன் - இரவுப்போது வந்தயைின் தன் நெடுமனை
சென்றுள்ளான், கல்லென ---; வேந்தூர் யானைக் கல்லது - நும்முடைய
வேந்தன்  ஊர்ந்துவரும்  யானையை  எறிவதற்கன்றி; தன் இலங்கிலை
வேல் ஏந்துவன் போபான் - தன்னுடைய விளங்குகின்ற இலை
முகத்தையுடைய வேலைக் கையில் ஏந்தாள் போல்கின்றானாகலான்
நாளையே நும் வேந்தனை வரவிடுமின்; எ - று.


     பல் சன்றீரே, அரசும் ஓம்புமின், களிறும் போற்றுமின், எனை
நாள் தாக்கும் அனை நாள் எறிதல் யாவணது; எறிதல் செல்லானாதலால்,
கண்ணிய பொருள் அறிந்தோர் எம்முன் வருக; ஓம்புமின்; உதுக்காண்
பாராட்டிப் படர்ந்தான்; ஏந்துவன் போலான் என வினைமுடிவுசெய்க.
குமரியின் கூந்தல் பிறரால் தீண்டப்படாதவாறு போல முள்வேலி
அணுகப்படாதென்பது தோன்ற, “குமரி மகளிர் கூந்தல் புரைய” என்றார்.
அரசனையும் களிற்றையும் சான்றோர் பெரிதும் பேணிக் காப்பதறிந்து
கூறுகின்றானாகலின், “நும்மரசும் ஓம்புமின், நும் களிறும் போற்றுமின்”
என வற்புறுத்துவான் போல் இகழ்ந்தான். மேல்வந்த வேந்தனே முதற்கண்
போர் தொடுக்கவேண்டியவனாக, அது செய்யா திருந்தமையின்,
“எறியாரெறிதல் யாவணது” என்றும், நிகர்ந்து மேல்