பக்கம் எண் :

202

     

வந்த வேந்தனையல்லது நிகராகாதாரோடு பொருதல் மானமுடைய வேந்தர்
செயலன்மையின் “எறிந்தோர் எதிர் சென்றெறிதலும்  செல்லான்”  எனத்
தன்னிறைவனை   மிகுத்தோதினான்.   எதிர் வாரின்மையால்   செயல்
பிறிதின்மையின்,  குதிரைகளின்  பண்புகளைப்  பார்த்துப் பாராட்டினான்.
எங்கள் இறைவன்  என்பான், “புரவிப்  பண்பு  பாராட்டி”  யென்றான்.
குடங்கொண்டான்  வீழின்குடம்  வீழ்தல் தானே பெறப்படுதல் போல
வேந்தூரும் யானையை வீழ்த்த வழி வேந்தனை வீழ்த்துவது சொல்லாமே
தோன்றுதலின், “வேந்தூர் யானைக்கல்லது ஏந்துவன் போலான் தன்
இலங்கிலைவேல்” என்றான்.

     விளக்கம்: தானை மறமாவது, “பூம்பொழிற் புறங் காவலனை, ஓம்
படுத்தற்கு முரித்தென மொழிப (பு. வெ. மா.7:4) என வரும். அருமுள்வேலி
யென்றதன்கண்,  அருமையை  வேலிக்கேற்றி,  கடத்தற்கரிய  வேலியென
வுரைக்க.  “கல்லென்  பாசறை”  யெனச்   சிறப்பித்தார்,   கல்லென்னு
மோசையல்லது வெற்றிக்குரிய விறல் காணப்படாமை குறித்தற்கு. பல் சான்றீர்
என்புழிப் பன்மை சான்றோர் மேனின்றது. எறியாரை எறியாத வேந்தன்முன்
எறிவதன்றி எத்தனை நாள் தங்கினும் பயனின்றென்பார், “எனைநாள் தங்கும்
நும் வோரேயனைநாள், எறியா ரெறிதல் யாவனது” என்றார், “எறிந்தோர்
எதிர் சென்றெறிதலும் செல்லான்” என்றது, எதிர்சென்றெறியும் படையை
விலக்கித் தற்காப்பொன்றே செய்தானேயல்லது தான் மேற்சென்றெறிந்திலன்
என்றும், எனவே, எதிர்சென்றறிந்தோர் நிகர்க்கும் திறனில்லாதவரென்றும்
அறிக. “பலமென்றிகழ்த லோம்புமின்” என்பது, பலராய்க் காக்கைபோற்
கூடிக்கொண்ட நீவிர் கரைவது பயனின்று நிலத்தின் எல்லையை யளந்து
காண்டற்கு வகுத்த நெறிபோலும் நெறியெனவும், எல்லை காணப்படாமையின்
நில்லாது நெடுகும் நெறியெனவும், அதுவும் அகலிதாகவன்றிக் குறுகிய
தெனவும் கொள்ளினும் அமைமயும். இந்நெறியினும் அயராது சேறல்பற்றி,
“வண்பரிப் புரவி” யென்றாரென்ற கொள்க. வேந்தரூரும் யானையை
யெறிதலில் வீரர்க்கு வேட்கை மிகுதி யென்ப. “கட்டியன்ன காரி மேலோன்,
தொட்டது கழலே கையது வேலே, சுட்டியதுவுங் களிறே ஒட்டிய, தானை
முழுதுடன் விடுத்துநம், யானை காமினவன் பிறிதெறியலனே” (புறத். 1372)
என வேந்தனொருவன் தானையைப் பணிப்பது காண்க. “இகழத் லோம்புமின்
புகழ்சான் மறவீர், கண்ணிமைப் பளவிற் கணைசெல் கடுவிசை, பண்ணமை
புரவிப் பண்பு பாராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென, வேந்தூர்
யானைக்கல்ல தேந்துவன் போலான்றன் னிலங்கிலை வேலே” (புறத். 1370)
என்ற பாட்டு இதனோடொத்திருத்தல் காண்க.

302. வெறிபாடிய காமக்காணியார்

     புன்புலங்கள்   சூழ்ந்த   சீறூர்களையுடைய  தலைமகனொருவன்,
வேந்தரிருவர் தும்பை சூடிப் பொருத போர்க்களத்தில் ஒரு வேந்தன்
பக்கலில் தானைத்தலைவனாய் நின்று கடும்போர் புரிந்தான். வெறிபாடிய
காமக்காணியார் அவன் போர்த் திறத்தைக் காணும் பேறு பெற்றார். அத்
தலைவனுடன்  குதிரைமேல்  வீரரும்  போர்  செய்தனர்.  குதிரைகள்
வளைத்துவிட்ட  மூங்கில்கள்  மேலெழுவதுபோலப்   போரில்