பக்கம் எண் :

203

     

தாவித்  துள்ளிப்  பாயந்து வென்றி விளைத்தன. அவன் போரிற்பெற்ற
பொற் பூக்களை அவனுடைய விறலியர் கூந்தலில் அணிந்து கொண்டனர்.
புகழ்பாடிப்  பரவிய  பாணர்களுக்கு  அவன் ஊர்கள் பல நல்கினான்.
இப்பெற்றியோன் போரில் எறிந்து வீழ்த்திய களிறுகளை  யெண்ணின்
மழைத்துளியினும் பலவாயிருந்தன. இக்காட்சி இப் பாட்டின்கண் அழகுறப்
பாடப்பட்டுளது.

 வெடிவேய் கொள்வது போல வோடித்
தாவு புகளு மாவே பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
நரந்தப் பல்காழ்க் காதை சுற்றிய
5ஐதமை பாணி வணர்கேர்டுத் சீறியாழ்க்
 கைவார் நரம்பின் பாணர்க் கோக்கிய
நிரம்பர் வியல்பிற் கரம்பைச் சீறூர்
நோக்கினர்ச் செகுக்குங் காளை யூக்கி
வேலி னட்ட களிறுபெயர்த் தெண்ணின்
10விண்ணிவர் விசும்பின் மீனும்
 தண்பெய லுறையு முறையாற் றாவே.

     திணை: அது; துறை:  குதிரைமறம்.  வெறிபாடிய  காமக்காணியார்
பாடியது.


     உரை: வேய் வெடி கொள்வது போல - வளைத்து விட்ட மூங்கில்
மேனோக்கி யெழுவது போல; தாவுபு ஒடி உகளும் மா - பாய்ந்தோடித்
திரியா நின்றன குதிரைகள்; பூ - பொற்பூக்கள்; விளங்கிழை மகளிர் கூந்தல்
கொண்ட  -  விளங்கிய   அணிகளை  யணிந்த  விறலியர்    கூந்தலை
இடங்கொண்டன; நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய நரந்தப் பூவால் பல
வட்ங்களாகத் தொடுக்கப் பட்ட  மாலை  சுற்றப்பட்ட;  ஐதமை  பாணி
மென்மையாக அமைந்த தாளத்துக்கேற்ப; வணர்கோட்டுச் சீறியாழ் - வளைந்த
கோட்டையுடைய சிறிய யாழினுடைய; கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய -
கைவிரலால்  இசைத்தொழில்  புரிய  இசைக்கும்  நரம்பினை  இயக்கிப்
பாடுதலையுடைய  பாணர்களுக்குக் கொடுக்கப்பட்டன்; நிரம்பர் இயவின்
கரம்பைச் சீறூர் - குறுகிய வழிகளையுடைய கரம்பைகள் நிறைந்த சிற்றூர்கள்;
நோக்கினர் செகுக்கும் காளை - தன்னைப் பகைத்துப் பார்த்த பகைவரைக்
கொல்லும் காளைபோல்வானாகிய அவன்; ஊக்கி வேலின் அட்ட களிறு
பெயர்த்து எண்ணின் - ஊக்கம் கிளர்ந்து தன் வேலாற் கொன்ற களிறுகளை
ஒவ்வொன்றாக  எண்ணிப் பார்க்குமிடத்து; விண்ணிவர் விசும்பின் மீனும் -
முகில்கள் பரந்துலவும் விசும்பிலுள்ள விண்மீன்களும்; தண் பெயல் உறையும்
-குளிர்ந்த மழை சொரியும் துளிகளும்; உறையாற்றா - அளவிடற்காகாக;
எ - று.