பக்கம் எண் :

205

     
 எள்ளுநர்ச் செகுக்குங் காளை கூர்த்த
வெந்திற லெஃக நெஞ்சுவடு விளைப்ப
5.ஆட்டிக் காணிய வருமே நெருதை
 உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலிற் போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்குமருப் பியானை யெறிந்த வெற்கே.

     திணையும் துறையும் அவை. எருமைவெளியனார் பாடியது.

     உரை: நிலம்  பிறக்கிடுவது  போல்  குளம்மபு கடையூஉ - நிலம்
பின்னிடுவதுபோலக் காற்குளம்பை யூன்றி; உள்ளம் ஒழிக்கும் கொட்பின்
மான்மேல்  -   காண்போர்   ஊக்கத்தைக்   கெடுக்கும்    விரைந்த
செலவினையுடைய குதிரைலே் வரும்; எள்ளுநர்ச் செகுக்கும் காளை -
தன்னை யிகழும் பகைவரைக் கொல்லும் காளையாவான்; கூர்த்த வெந்திறல்
எஃகம் நெஞ்சு வடு விளைப்ப ஆட்டி - கூரிய வெவ்விய வலியினைமயுடைய
வேலால் எதிர்ந்தார் மார்பைக் குத்திப் புண் செய்து அலைத்துக்கொண்டு;
காணிய வரும் காண்டற்கு வருகின்றான்; நெருநை - நேற்று; உரைசால்
சிறப்பின் வேந்தர் முன்னர் - புகழமைந்த தலைமையினையுடைய வேந்தர்கள்
காண; கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து - கரையை யலைக்கும்
கடலைப் பிளந்து செல்லும் தோணியைப்போலப் பகைவர் படையைப்
பிளந்து; அவர் கயந்தலை மடட்பிடி புலம்ப - அவர்களுடைய மெல்லிய
தலையையுடைய இளமையான பிடியானைகள் தனிமையுற்று வருந்த; இலங்கு
மருப்பு யானை எறிந்த எற்கு - விளங்குகின்ற கோட்டினையுடைய
களிறுகளைக் கொன்ற என் பொருட்டு; எ - று.


     குதிரை செல்லும் கடுமையால் நிலம் பின்னிட்டோடுவது போறலின்,
“நிலம் பிறக்கிடுவது போல்” என்றார். விரைந்த செலவால் காண்போர்
மனமாகிய  உள்ளமும்  நிகராமை  செய்யும்   என்றுரைப்பாருமுளர்.
விளைத்தென்பது விளைப்பவென நின்றது. என்னொடு பொருதுவென்றி
காணவருகின்றான். வருக என்பான், “காணிய வரும்” என்றான். “வேந்தர்
முன்னர்” என்றான், தங்களுடைய கண் முன்னே யான் செருவிளைப்பவும்
அவர் அஞ்சி யெதிர்ந்திலரென்பது வற்புறத்தற்கு. கயந்தலை யென்றதற்குப்
பெரிய தலை யென்றுரைப்பினு மமையும். நெருதை வேந்தர் முன்னர்,
போழ்ந்து, எறிந்த எற்கு மான்மேல் காளை எஃகம் ஆட்டிக் காணிய வரும்
என வினை முடிவு செய்க.

     விளக்கம்: நிலவுலகு பிற்பட்டு நிற்ப மேலுலகு செல்வதுபோலக் காற்
குளம்பை யூன்றி மேனோக்கிப் பாய்ந்தோடுவதுபோற் சேறலின், “நிலம்
பிறக்கிடுவதுபோற் குளம்மபு கடையூஉ” என்றார். கடையூஉ - கடைந்து,
கடவி யென்பது பொருளாயின் கடைஇ யென்று பாட மிருத்தல் வேண்டும்:
“ஊக்கறக் கடைஇ” (பதிற் 31) எனவருதல் காண்க.