313.மாங்குடிகிழார் வேந்தர் இருவர் பொருத போர்க்களத்தில் சான்றோர் பாராட்டிப் புகழ்தற்குரிய வெற்றி பெற்று வாகைசூடி நின்றான் ஒரு தானைத்தலைவன், அவன் பேராண்மையேயன்றிக் கொடைவண்மையும் பெரிதுடையன்; கொடுத்தற்குரிய கைப்பொருள் மிகவுடையனல்லனாயினும் தன்பால் வரும் இரவலர் களிறும் தேரும் வேண்டினாலும், ககைவர் பால் உள்ளவற்றைத் தான் உடையான்போல வழங்கும் உரவோனாவான். அவன் அவ்வாறு கருதற்கேதுவாகிய உள்ள நிலை இகழும் பான்மையுடைய தன்று என அவன் தலைமையின்கீழ் நின்று பொரும் வீரர் பேசிக் கொண்டனர். இதனை மாங்குடிகிழார் கேட்டனர். மாங்குடிகிழார் பாண்டியன் தலையாலங் கானத்துக் செருவென்ற நெடுஞ்செழியனைப் பல பாட்டுகளிற் பாராட்டிப் பாடி மாங்குடியென்னும் ஊர்க்குச் கிழாராயினர். மருதனென்பது இவரது இயற்பெயர். அதனால் இவர் மாங்குடி மருதனாரென்றும் கூறப்படுவர். பத்துப் பாட்டுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியும் இவர் பாடியது. இதனால் இவர் மதுரைக்காஞ்சிப் புலவரென்றும் சான்றோரால் பாராட்டப்பெறுவர் இவர் தென்பாண்டி நாட்டு வாட்டாற்று எழினியாதன் என்பவனையும் பாடியுள்ளார். | அந்த நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்று மிலனே நச்சிக் காணிய சென்ற விரவன் மாக்கள் களிறொடு நெடுந்தேர் வேண்டினுங் கடவன் | 10. | உப்பொய் சாகாட் டுமணர் காட்ட | | கழிமுரி குன்றத் தற்றே எள்ளமை வின்றவே னுள்ளிய பொருளே. |
திணை: அது; துறை: வல்லாண்முல்லை. மாங்குடிகிழார் பாடியது.
உரை: அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் - வழிகள் பல பொருந்திய நாட்டையுடையனாகிய பெரிய வலிமிக்க தலைவன்; கைப்பொருள் யாதொன்றும் இவன் - கையிலே பொருள் யாது முடையனல்லனெனினும்;நச்சிக் காணிய சென்ற இரவல் மாக்கள் -பொருளை விரும்பி அவனைக் காண்டற்கு அவன்பாற் சென்ற இரவலர்; களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன் -யானையும் தேரும் வேண்டினாராயினும் பகைவர்பால் உள்ளவற்றைக் காட்டித் தரும் கடப்பாடுடையன்; அவன் உள்ளிய பொருள் - அவன் அவ்வாறு தருதற்கேற்ப அவன் உள்ளத்தே கருதும் கருத்து; உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட கழிமுரி குன்றத் தற்று - உப்பைக் கொண்ட செல்லும் வண்டிகளையுடைய உப்பு வாணிகரது காட்டிடத்தாகிய கழி நீரால் அலைக்கப்பட்ட குன்றம் போன்றதாய்; என் அமைவின்று இகழப்படும் பான்மையுடைத்தன்று; எ - று. |