பக்கம் எண் :

221

     
 வேல்படித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
5ஒளிறுவா ளருஞ்சம் முருக்கிக்
 களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

     திணை: வாகை; துறை: மூதின்முல்லை. பொன்முடியார் பாடியது.

     உரை: ஈன்று புறந்தருதல் என் தலைக் கடன் - மகனைப் பெற்று
வளர்த்துவிடுதல் என்னிடத்துக் கடமையாகும்; சான்றோனாக்குதல் தந்தைக்குக்
கடன் - அவனை நற்பண்புகளால் நிறைந்தவனாக்குவது தந்தையால் உள்ள
கடமையாகும்; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடன் - அவனுக்கு
வேண்டும் வேலை வடித்துக் கூரிதாக்கித் தருவது கொல்லனது கடமையாகும்;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன் - நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது
நாடாளும் வேந்தனது கடமையாகும்; ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி -
விளங்குகின்ற வாளைக் கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து;
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடன் - பகைவர் களிற்றியானைகளைக்
கொன்று வென்றி யொடு மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமையாகும்;
- று.

     
பெற்ற   தாய்  பசியறிந்து  உணவூட்டி  உடம்பை  வளர்த்தலின்,
“புறந்தருதல்” என்றார். சான்றாண்மை உயிரோடியையும் அமைதியாதலின்,
அதனையடுத் தோதினார். நல்லாரை அன்புறுத்தியும் அல்லாதாரை ஒறத்தும்
நல்லொழுக்கம் நிலவச் செய்தலின், “நன்னடை நல்கல் வேந்தற்கக் கடன்”
என்றார். அருஞ்சமத்து அஞ்சாது சென்று வஞ்சியாது பொருது பகைவரது
பகைமை யெஞ்சாவகை வென்று மேம்படுதல் மறக்குடியிற் பிறந்த மகனது
கடன் என்பதை வற்புறுத்தற்கு இறுதிக்கண் வைத்தோதினார்.

    விளக்கம்:
உறக்கம்   வரினும்  பசியெடுக்கினும்  குழந்தைகள்
அழுமாகலின், அவற்றின் பசிக்குறிப்பறிந்து பாலூட்டும் ஒட்பம் தாய்மையின்
தனிப்பெருஞ்சிறப்பாதலாம், மணிவாசகரும் “பானினைந் தூட்டுந்தாய்” என்று
விதந்து கூறுவது காண்க. தாய்  உடலையும்  தந்தை  உடலகத்து  நிலவும்
உயிரறிவையும் ஓம்புங்  கடப்பாட்டினராதலால்,  “புறந்தருதல்”  தாய்க்குக்
கடனாதலும்,   சான்றோனாக்குதல்    தந்தைக்குக்    கடனாதலும்
எடுத்தோதப்பட்டன.  அவ்வவ்வூர்களிலிருக்கும் கொல்லர் முதலியோர்
அவ்வவ்வூரவர்க்கு  வேண்டுவன  செய்தல்  வேண்டுமென்றும்   அயலூர்
சென்று பணி செய்வது குற்றமென்றும் முதற் குலோத்துங்க சோழன் காலத்தும்
ஒரு கட்டுப்பாடிருந்ததெனத் திருபுவனையிலுள்ள கல்வெட்டொன்று ( A. R.
No. 205 of 1919) கூறுவது பொன் முடியர்ரி இப்பாட்டின் கட் கடனாக
வகுக்கும் கொள்கையை வற்புறுத்துகிறது. ஈன்றான் முதலியோர்க்கு முறையே
புறந்தருதல் முதலாகவுள்ள தொழிற் பண்புகளைக் கடனாகக் கூறியது
அவற்றை நன்குணர்ந்து வழுவாது ஆற்றல்வேண்டும் என்றற்கென வறிக.