பக்கம் எண் :

227

     

316. மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

     கள்ளில் என்பது தொண்டைநாட்டில் உள்ளதோர் ஊர். இவ்வூரினரான
கடையத்தன் என்பருக்கு மகனார் நம் சான்றோராகிய வெண்ணாகனார்.
இவர் மதுரையில் வந்து தங்கியிருந்தமையின், மதுரைக் என்றோர் ஊருண்டு.
ஒருகால் ஒரு வேந்தன்  வேறொரு  வேந்தனுடன்  போருடற்றி  வெற்றி
யெய்தினான். பகை வேந்தன் இறந்துபட்டான். வெற்றிபெறற் வேந்தனுடன்
தானைத்தலைவரும் பிற சான்றோரும் கள்ளுண்டு மகிழ்ந்தனர், தன் மனைக்கு
மீண்டு வந்த தலைவன் கள்ளை விடியலிலும் மிகவுண்டு அக்கள்ளை வாழ்த்தி
உறங்குவானாயினன். அவன்பாற் சென்று பரிசில் பெற்றுவரும் பாணர்
தலைவன், வழியில் வேறுசில பாணரைக் கண்டான். இப் பாண் தலைவன்
அவர்களுடைய தலைவனை நோக்கி, “மனை முன்றிலில் துஞ்சுவோனாகிய
அவனே எம் தலைவன்; யாம் அவன் பாணரேம்; நேற்று வந்த விருந்தை
ஓம்பும் வகையின்றி அதன் பொருட்டுத் தன் இரும்புடைப் பழவானை ஈடு
வைத்தனன். அப் பெற்றியேன், பகை வேந்தன் துன்புற்று வீழவென்று அவ்
வெற்றியாற் பெற்ற பொருளை எமக்கு ஈந்து சிறப்பித்தான். நீவிரும் சென்று
பரிசில் பெற்று உண்பனவுண்டு வாய் சிவந்து வருவீராக” என்று தெரிவித்தான்.
இதனைக் கேட்ட வெண்ணாகனார் இப் பாட்டில் அவன் கூற்றுப் பொருளாக
வரப் பாடியுள்ளார்

 கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்செருக் கனந்தர்த் துஞ்சு வோனே
அவனெம் மிறைவன் யாமவன் பாணர்
 5.நெருதை வந்த விருந்திற்க மற்றுத்தன்
 இரும்புடைப் பழவாள் வைத்தன் னின்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண்
டீவதி லாள னென்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக்
 10.கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச்
 சென்றுவாய் சிவந்துமேல் வருக
சிறுகண் யானை வேந்துவிழு முறவே.

     தினணயும்  துறையு  மவை.  மதுரைக்  கள்ளிற்   கடையத்தன்
வெண்ணாகனார் பாடியது.

     உரை:சிறுகண் யானை வேந்து விழு முறவே -சிறிய கண்களையுடைய
யானைய யுடையோனாகிய பகை வேந்தன் போரில் வீழ்ந்து இறந்தானாக;
கள்ளின் வாழ்த்தி கள்ளின் வாழ்த்தி - கள்ளினை வாழ்த்திக் கள்ளினை
வாழ்த்தி; காட்டொடுமிடைந்த சீயா முன்றில் - செந்தைகளால் நிறைந்து
தூசி துடைக்காத முற்றத்தின்கண்; நாட் செருக்கு அனந்தர் துஞ்சுவோன் -
விடியற்காலக்தே யுண்ட கள்மயக்கத்தால்