பக்கம் எண் :

233

     

     உரை: பூவல்   படுவில்  கூவல்   தொடீஇய  செங்கண்   சின்னீர்
பெய்த-செம்மண் நிலத்து மடுவில் உள்ள நீர்நிலையைத் தோண்டியதனால்
உண்டாகிய சிவந்த இடத்துச் சிறிதாக வூறிய நீரை முகந்துவைத்த; முது
வாய்ச் சாடி  அஃடு  உண்டென  அறிதும் -  முதிய  வாயையுடைய
சாடியின் அடிப்பகுதியில் நீர் சிறிது உண்டென்று அறிகின்றேம்;
மாசின்ற - அது குற்ற மின்றாகவும் உளது; படலை முன்றில் சிறு தினை
யுணங்கல் - படல் கட்டிய முற்றத்தில் சிறிய தினையாகிய உலர்ந்ததை;
புறவும் இதலும் அறவும் உண்க எனப் பெய்தற்கு---;;புறாக்களும்
இதற்பறவைகளும் முற்றவும் உண்க என்று தெளித்து அவற்றைப்
பிடித்துச் சமைத்தற்கு; பொழுது எல்லின்று - ஞாயிறு மறைந்து
இரவாயிற்று;  அதனால் -;  முயல்  சுட்டவாயினும்  தருகுவேம் -
உள்ளது முயலினது சுட்ட கறியேயாயினும் அதனை உண்ணத்தருவேம்;
புகு தந்து ஈங்கு இருந்தீமோ -எம் மனைக்குட்புகுந்து இவ்விடத்தே
இருப்பாயாக; முதுவாய்ப் பாண - அறிவு முதிர்ந்த பாணனே;
கொடுங்கோட்டமான் நடுங்குதலைக் குழவி - வளைந்த கொம்பையுடைய
ஆமானது அசைகின்ற தலையையுடைய இளங் கன்றை; புன்றலைச் சிறா
மன்னன் - தம்முடைய சிறு தேர்க்குச்  சேங்கன்றெனப்  பூட்டி
விளையாடும்  சிறிய  வூரையுடைய மன்னனாகிய கொழுநன்; நெருதை
ஞாங்கர் - நேற்றைய நாளில்; வேந்து விடு கெதீாலொடு சென்றனன்
- பெருவேந்தன் பொருட்டுப் போர்த் தொழிலை மேற்கொண்டு
சென்றுள்ளான்; வந்து - நாளை வினைமுடித்து வந்து; நின்பாடினி
மாலை யணிய - நின்னுடைய பாடினி பொன்னரி மாலை அணிந்து
மகிழ; நினக்கு வாடாத்தாமரை சூட்டுவன் - நினக்குப் பொன்னாற்
செய்த தாமரைப் பூவைச் சூட்டுவான்; எ - று.


      பாண, சாடி, மாசின்று; பொழுது எல்லின்று; அதனால், தருகுவேம்;
புகுந்தது ஈங்கிருந்தீமோ; மன்னன் நெருதை ஞாங்கர் சென்றனன்; நாளை
வந்து, அணிய, சூட்டுவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆங்கென்ப
தசைநிலை. செம்மண் நிலத்துக் கூவலில் தோண்டிய சிறிய இடம்
சிவந்திருத்தலின், “செங்கண்” எனப்பட்டது. சாடியின் வாய் உயர்ந்
திருத்தலின் “முதுவாய்ச் சாடி” யென்றார். அகட்டிலுள்ள நீர் கசடு கலந்து
மாசுடைத்தாமாயினும், இஃது அன்னதன்று என்றதற்கு “மாசின்று” என்றாள்.
தினையுணங்கலைத் தெளித்து அவற்றை யுண்ணவரும் புறாவையும்
இதலையும் பிடித்தக் கொன்று சமைத்தற்கு இல்லாதபடி இரவு
வந்துவிட்டதென்பாள் “புறவும் இதலும் உண்கெனப் பெற்தற்கு எல்லின்று
பொழுது” என்றாள். மிக்க இளங்கன்றை “நடுங்குதலைக் குழவி” யென்றும்,
இளைய சேங்கன்றினை வாளாது “கன்” றென்றும் கூறினார். பூட்டும்
என்றதற்கேற்பச் சிறுதேர் வருவிக்கப்பட்டது. நெருதை ஞாங்கர்