| 10. | கொய்குர லரிசியோடு நெய்பெய் தட்டுத் | | துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோ றுண்டினி திருந்த பின்றை......... .........தருகுவன் மாதோ தாளிமுத னீடிய சிறுநறு முஞ்ஞை | 15. | முயல்வந்து கறிக்கு முன்றிற் | | சீறூர் மன்னனைப் பாடினை செலினே. |
திணையும் துறையு மவை.
உரை: ...புல்லென் அடைமுதல் புறவு சேர்ந்திருந்த - புல்லென்ற தழையும் அடிமரமுமுடைய காடாகிய முல்லை நிலத்தைச் சேர்ந்துள்ள, புன்புலச் சீறூர் - புன்செய்க் கொல்லைகளையுடைய சீறூர்களில்; நெல் விளையாது - நெற்பயிரும் விளையாது; வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் - விளைவனவாகிய வரகும் தினையுமென உள்ளவை யெல்லாம்; இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன - இரவலர்க்குக் கொடுத்ததனால் குறைந்து போயின; ...அமைந்தனன் - பொருந்தினான்; அன்னனாயினும் அத்தன்மையுடையனாயினும்; பாண - பாணனே; வள்ளத்திடும் பால் உள்ளுறை தொடரியொடு - வள்ளத்திற் பெய்து உண்ணப் படும் பாலினது உள்ளே உறைந்த தயிரும் தொடரிப் பழமும்;களவுப் புளியன்ன விளைகள்- களாப் பழத்தின் புளிப்புப்போலப் புளிப்பேறிய கள்ளும்...வாடூன் கொழுங் குறை - வெந்து வாடிய தசையாகிய கொழுவிய துண்டங்களை, கொய் குரல் அரிசியொடு - நெய் பெய் தட்டு கொய்யப்பட்ட கதிரிடத்துப் பெற்ற அரிசியுடனே நெய் கலந்து சமைத்து; துடுப்பொடு சிவணிய களிக்கொள் வேண் சோறு - துடுப்பால் துழாவப்பட்ட களிப்பைத் தன்பால் கொண்ட வெள்ளிய சோற்றை; உண்டு இனிதிருந்தபின் - பசி தீரவுண்டு இனிதிருந்த பின்னர்; ...தருகுவன் - கொடுப்பான்; தாளி முதல்நீடிய சிறு நறு முஞ்ஞை - தாளி மரத்தின் அடியில் நீளப் படர்ந்திருக்கும் சிறிய நறிய முன்னைக் கொடியை; முயல் வந்து கறிக்கும் முன்றில் - குறு முயல்கள் வந்து மேயும் முற்றத்தையுடைய; சீறூர் மன்னைப் பாடினை செலின் - சிறிய வூர்களையுடைய வேந்தனைப் பாடிச் செல்வாயாயின்; எ - று.
புன்புலச் சீறூலெனவே நெல்விளையாமை பெறப்படுமாயினும் நெல் விளையா தென்றது, வரகும் தினையும் மிக விளையுமென்பதை வற்புறுத்தற்கு, நெல் விளையும் நாட்டையுடைய பெருவேந்தன்பாற் காணப்படாத கொடைநலம் சீறூர் மன்னன்பால் உண்மையுணர்த்தி நின்றது. ஊன் துண்டங்களைச் சோற்றிற் கலந் தடுதல் பண் டையோர் மரபு. தாளி, ஒருவகைப் பனைமரம் தாளித் தண்பவர் (குறுந். 104) என்றலின் ஒரு |