| வகைக் கொடியுமாம். பாண, சீறூர், நெல் விளையாது; எல்லாம் ஈயத்தொலைந்தன; அமைந்தனன்; அன்னனாயினும் பாடினை செலின் தருகுவன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: திணைஹயம் துறையு மவை யென்றதன்பின் பங்கு... என ஏட்டிற் காணப்படுகிறது. கிடைத்த ஏட்டில் சில சொற்களும் எழுத்துக்களுமே கிடைத்தன. நெல் விளையாதாயினும் வரகுந் தினையும் விளையும்; அவையும் இரவலர்க்கீயிப்பட்டன என்றான்; எனவே, சீறூர் மன்னனுடைய ஓம்பா ஈகை யுரைக்கப்பட்டதாம். வெள்ளத் திடும்பால் என்று பாடமாதயின், வெள்ளம்போற் சொரியப் படும் பால் என்றுரைக்க. தொடரி, ஒருவகைப் பழமரம். கொங்கு வேளிர் இதனைக் கொடுமுள் தொடரி (பெருங். 1:52 - 38) என்பதனால், இதற்கு வளைநத முள்ளுண்டெனத் தெரிகிறது. முஞ்ஞை முன்னைக் கொடி. இப் பாட்டு மிகச் சிதைந்திருந்ததலால் வேறே விளக்கம் காண இயலவில்லை. 329. மதுரை அறுவை வாணிகள் இளவேட்டனார் மதுரை நகரத்தவரான இளவேட்டனார் அறுவை வாணிகம் செய்தவராதலால் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் எனப் படுவாராயினர். இவர் அகப்பொருள்நெறியில் பல திணைகளையும் இனிமையுறப் பாடும் நல்லிசை வாய்ந்தவர். களவின்கண் ஒழுகும் தலை மகன் ஒருவன் ஒருகால் தலைவியின் நெடுமனைக்கு வத்தானாக, அவனைக் கண்ட தலைவியின் நற்றாய் முருகன் எனப் பிறழவுணர்ந்து அவனை வழிபட்டனள். அதனால் பியப்புமிக்க தலைமகள், முருகென வுணர்ந்து முகமன் கூறி, உருவச் செந்தினை நீரோடு தூஉய், நெடுவேள் பரவும் அன்னை யெனத் தன் தோழியோடு சொல்லாடுவதும், புனங்காவல் புரியுமிடத்து அவள் தலைவனோடு கூடி அருவியாடுத லும் சோலையில் விளையாட்டயர்தலும், தலைமகள் விளையாடுங்கால் சென்ற தலைவன் அவளைக் கண்டு, விளையாட்டாயமொடு வெண்மணலுதிர்த்த, புன்னை நுண்டாது பொன்னி னொண்டு, மனைபுறந் தருதி யாயின் எனையதூஉம், இம்மனைக் கிழமை யெம்மொடு புணரின், தீதுமுண்டோ மாதராய் எனச் சொல்லி நட்புக் கொள்வதும் பிறவும் மிக்க இன்பந் தருவன வாகும். காந்தட்பூ பாம்பு படம் சுருக்கியது போல வீழும் என்பதை, பாம்பு பையவிந்தது போலக் கூம்பிக், கொண்டலின் தொலைந்த ஒண்செய் காந்தள், கல்மிசைக் கவியும் (குறுந். 185) என்பதும், இல்லிருந்து நல்லறம் புரியும் தலைமகளை விருந்து விருப்புறூஉம் பெருந்தோட் குறுமகள் (நற். 221) என்பதும் பிறவும் இவரது புலமை நலத்தைச் சிறப்பிப்பனவாகும். இவர் பாடியனவாகப் பல பாட்டுக்கள் தொகை நூல்களுள் உள்ளன. ஒருகால் இவர் பேராண்மை மிக்க தலைவன் ஒருவனது சிற்றூருக்குச் சென்றார். அவ்வூரில் உறையும் மறக்குடி மகளிர் நடுகல்லுக்கு நீராட்டி வழிபடுவதுகண்டார். அத்தலை மகனும் புரவலராகிய செல்வர்ஙககுண்டான இடுக்கணைப் பெரிதும் நிளையாது இன்மையால் இரந்துண்டு வாழும் இரவலர் இடுக்கணத் தீர்ப்பதே சிறந்த செயலாகக் கருதியிருப்பதையும், பாம்புறையும் புற்றுப் போல அவ்வூர் பகைவர் நெருங்குதற்கஞ்சும் அச்சம் பயந்து வியங்குவதையும் |