பக்கம் எண் :

255

     

கண்டார். இக் காட்சி இளவேட்டனார்க்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. அதன்
விளைவாக இப் பாட்டினைப் பாடியுள்ளார்.

 இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லி னாட்பலி யூட்டி
நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குன் மாப்புகை மறுகுடன் கமழும்
 5.அருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற்
 றரவுறை புற்றத் தற்றே நாளும்
புரவலர் புன்க ணோக்கா திரவலர்க்
கருகா தீயும் வண்மை
உரைசா னெடுந்தகை யோம்பு மூரே.

     திணையுந் துறையு மவை. மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
பாடியது.


     உரை: இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர் - இல்லங்களில் அடப்படும்
கள்ளினையுடைய சிலவாகிய குடிகள் வாழும் சீறூர்; புடை நடு கல்லின் -
பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு; நாட்பலி யூட்டி - விடியற் காலத்துப்
பலியைப் படைத்து; நன்னீராட்டி - நல்ல நீரையாட்டி; நெய் நறை கொளீஇய
- செ் விளக்கேற்றுதலாலுண்டாகிய; மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும் -
மேகம் போலும் புகையெழு ந்து தெருவில் மணக்கும்; அரு முனை
இருக்கைத்தாயினும் - அரிய முதன்மையான இடத்தையுடையதாயினும்;
வரிமிடற்று அரவுறை புற்றத்து அற்று - வரி பொருந்திய கழுத்தையுடைய
பாம்பு தங்கும் புற்றை யொக்கும்; நாளும் - நாடொறும்; புரவலர் புன்கண்
நோக்காது - வேந்தராகிய செல்வர்கட் குண்டான துன்பத்தைப் பாராமல்,
இரவலர்க்கு அருகாது ஈயும் - வண்மை இரவலரது வறுமைத்துன்பத்தைப்
பார்த்து    அவர்கட்கு   அது   நீங்கக்   குறைவறக்   கொடுக்கும்
வள்யளன்மையையும்;  உரைசால்  நெடுந்தகை  புகழமைந்த - நெடிய
தகைமையைமுடைய தலைவன்; ஓம்பும் ஊர் - பாதுகாக்கும் ஊர்; எ - று.


     ஊர் புற்றத் தற்று எனக் கூட்டி வினைமுடிவு செய்க. ஆற்றிடைக்
குறையிலும் கவர்த்த  வழியிடையிலும்  நடப்பெறும்   கல்  சீறூர்களின்
பக்கத்திலும் நடப்பெறுதலின், “சீறூர்ப்புடை நடுகல்” என்றும், புகை மேகம்
போல் தெருவெங்கும் பரவிய தென்பார், “மறுகுடன் கமழ” வென்றும்
கூறினார். முனை, பகைவர் வந்து தாக்குதற்குரிய முதன்மை பெற்ற இடம்;
அது பகைவர் கொள்ளற்கரிய காவலுடைத்தாகிய வழி அரு முனையாம்;
அவ்விடத்தேயுள்ள ஊர் என்பார், “அரு முனை இருக்மைத்து” என்றார்.
நெடுந்தகையின் ஆண்மை யொளியை விளக்குதற்கு, “அரவுறைபுற்றத்தற்று”