| உயர்ந்த கோடுகளையும் யானைகளின் புள்ளிபொருந்திய முகத்தில் அணியப்படும் கொன்னாலாகிய பட்டம்;........, பரிசில் பரிசிலர்க்கீய- பரிசிற் பொருளைப் பரிசிலர்க்கு வழங்குதலின்; உரவுவேல் காளையும் கைதூவான் - வலிபொருந்திய வேலையுடைய காளையாகிய அவள் கணவனும் கையொழியான்; எ - று.
கண்பைச் சண்பங் கோரை யென்பர் நச்சினார்க்கினியர்;இக் காலத்தில் இதனைச் சம்பு என்பர்; ஈண்டு; ஆகுபெயர். பழனம், மருத நிலமுமாம். தூமயிரென்றது, மென்மையுடைமைபற்றி, படப்பைக்கண் தொகுக்கப்பட்டிருத்தலின், வைக்கோற்போர் படப்பு எனப்பட்டது. கைதூவல் ஓய்ந்து செயலறுதல். உயர் மருப்பு யானை யென்றது, பகைவருடைய யானைகளை. அவற்றின் ஓடைப் பொன்னைப் பாணர் முதலியோர்க்கு வழங்குவது மரபு. ஒன்னார் யானை யோடைப் பொன் கொண்டு, பாணர் சென்னிப் பொலியத் தைஇ (புறம். 126) என்று சான்றோர் கூறுவது காண்க. முயல் படப்பொடுங்கும்; மனையோள் கைதூவாள்; காளையும் கைதூவான் என வினை முடிவு செய்க.
விளக்கம்: ஊரியல்பு கூறுவார், சிறுவர் மன்றத்திலிருந்து ஆர்ப்பராயின், அது கேட்டுக் குறுமுயல் அஞ்சிப் படப்பைக்கண் ஒடுங்கும் என்றார்; பாணர் ஆர்த்தலாவது, பாணர்க்கு உணவும் கள்ளும் தந்து உண்பித்தல். பொருநர், கூத்தர் முதலிய பரிசிலர்க்கு அவர் வேண்டுவன நல்கிச் சிறப்பித்தலை, பரிசிலரோம்பல் என்றார். ஊணொலியரவம், உணவினை யுண்போரால் உண்ணுங்காலுண்டாகும் ஆரவாரம்.உரவு வேல் காளையென்றது. மறத்துறையால் பொருளீட்டுவன் என்பதுபட நின்றது. காளையாவான் மறத்துறையாற் பொருளீட்டுபவன். 335. மாங்குடி கிழார் மாங்குடி கிழார் முல்லை நிலத்துச் சிற்றூரொன்றில் வாழும் மக்களுடைய வாழ்க்கைக் கூறுகளை அவரணியும் பூவும் உண்ணும் உணவும் அவரிடை நிலவும் குடிவகையும் பரவுங் கடவுள் நிலையும் இப் பாட்டின் கண் வகுத்தோதுகின்றார். ஓர் ஊரில் வாழ்பவர் தம் கூற்றிலே நின்று வாழ்வாங்கு வாழ்ந்து மேம்படுவதும் வாகைத்திணையின்பாற் படுவதாகலான், இப் பாட்டும் வாகைப்பட்டாய் மூதின்முல்லைத் துறைக்குரிய தாய்த் தொகுக்கப்பட்டது. முல்லை நிலத்தூர் குடியெனவும் வழங்கும். இச் சிறு குடியில் வாழ்வோர் குரவும் தளவும் குருந்தும் முல்லையும் என்ற பூக்களை யணிவர்; அவர்க்கு உணவாவன வரகு, தினை, கொள், அவரை யென்ற நான்குமாகும்; அவரிடையே நிலவும் குடிவகை துடியன், பாணன், பறையன் கடம்பன் என்ற நான்குமாகும். இவ்வாறு பலவகைப் பூவணிதலும், உணவுண்டலும், குடிவகை கோடலும் இச் சிறு குடியிலுள்ளார்க்கியல் பாயினும், கடவுள் வழிபாட்டில் பட்டில் பல்வகை கோடல் இயல்பன்று. ஒரு கடவுளையே வழிபடுவர். அக் கடவுள் தானும் கன்னின்ற பெரு வீரராகும். இவற்றை இச் சிறு பாட்டிற் காணலாம்; இதுவும் தொடக்கப் பகுதியில் சிறிது சிதைந்து விட்டது. | அடலகுந் துப்பின்................ குரவே தளவே குருந்தே முல்லையென் | |