பக்கம் எண் :

268

     
 றிந்நான் கல்லது பூவு மில்லை
கருங்கால் வரகே யிருங்கதிர்த் தினையே
5சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொ
 டிந்நான் கல்ல துணாவு மில்லை
துடியன் பாணன் பறையன் கடம்பனென்
றிந்நான் கல்லது குடியு மில்லை
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
10ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
 கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே.

     திணையும் துறையுமவை. மாங்குடி கிழார் பாடியது.

     உரை: அடலருந் துப்பின் - வெல்லற்கரிய வலியினையுடைய... ;குரவே
தளவே குருந்தே முல்லை யென்ற இந் நான் கல்லது பூவும் இல்லை - குரவ
மலரும் தளவு மலரும் குருந்த மலரும் முல்லை மலரும் என்று சொல்லப்பட்ட
இந்த நால்வகைப் பூவல்லது வேறு பூக்கள் இல்லை; கருங்கால் வரகு
இருங்கதிர்த்தினை - கரிய காலையுடைய வரகும் பெரிய கதிரையுடைய
தினையும்; சிறு கொடிக்கொள் பொறிகிளர் அவரை - சிறிய கொடியாகிய
கொள்ளும் பொறிகளையுடைய அவரையும்; இந் நான்கல்லது உணாவும்
இல்லை - இந்த நான்குமன்றி உணவுப்பொருள் வேறே யில்லை; துடியன்
பாணன் பறையன் கடம்பன் என்ற இந்நான்கல்லது குடியும் இல்லை -
துடியன்குடி பாணன்குடி பறையன்குடி கடம்பன்குடி யென்று சொல்ல்ப்பட்ட
இந் நால்வகைக் குடிகளன்றி வேறு குடிகள் இல்லை; ஒன்னாத் தெவ்வர்
முன்னின்று விலங்கி - மனம் ஒன்றாத பகைவர் முன்னே அஞ்சாது நின்று
அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து; ஒளிறு ஏந்து மருப்பின் களிறு
எறிந்து வீழ்ந்தென - விளங்குகின்ற உயர்ந்த கோட்டினையடைய
யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண் பட்டு வீழ்ந்திறந்தாராக; நல்லே
பாவின் அல்லது - அவர் பெயரும் பீடும் எழுதி நட்ட கல்லைக் கடவுளாகக்
கருதி வழிபடுவதல்லது; நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இல - நெல்லைச்
சொரிந்து வழிபடும் கடவுள் வேறேயில்லை; எ - று.


      பூவகையும் உணாவகையும் குடிவகையும் கடவுள் வகையும் வேறு
பிறவுளவாயினும் அவை இந்நாட்டில் இல்லையென விதந்தோதிய வாறு.
பூவைக் குரவு முதலியவற்றோடும் உணாவை வரகு முதலியவற்றோடும்
கூட்டுக. கொள்ளுச் செடியாயினும் சிறு சிறு கொடியுடைமையின்,
“சிறுகொடிக் கொள்” என்றார். மக்கள் வலி யெல்லையைக் கடந்துள்ள
கடவுளை விலக்கி நடுகல்லைக் கடவுளாகப்