| பரவுவதற்குக் காரணம் கூறுவார், ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலக்கி, யொளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்வே பரவினல்லது என்றார். ஈண்டு நெல்லென்றது நெற்பொரியினை. வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும், செந்நெல் வான்பொரி சிதறி, (குறுந். 18) என்று சான்றோர் கூறுதல் காண்க.
விளக்கம்: பல்வேறு பூக்களும் உண்டெனினும், மக்களால் சிறப்பாக அணியப்படுவன இந்நான்குமே யென்றற்கு, குரவே தளவே குருந்தே முல்லை யென்ற இந்நான் கல்லது பூவும் இல்லை என்றார். குரவே தளவே என்ற பாடம் அச்சுப் பிரதியில் இல்லை. உணவாகும் சிறப்புப்பற்றி வரகு முதலியவற்றை முறையே கருங்கால் வரகெனவும், இருங்கதிர்த்தினை யெனவும், சிறுகொடிக் கொள்ளெனவும், பொறிகிளர் அவரை யெனவும் சிறப்பித்தார். குடிவகையில் வேளாளரும் வணிகரும் அரசரும் அந்தணரு மெனப் பொதுவகையின் பல குடிகள் இருக்கின்றன வெனினும், மேலே கூறிய பூவணிந்து வரகு முதலியவற்றைக் கொடையாகப் பெற்றுண்ணும் வகையில் சிறந்த குடிகளாதலின் துடியன் என்றார். மறங்கிளர்வித்துப் புகழ்பாடிச் சிறப்பெய்துவித்தலின், அணியோடும் உணவோடும் ஒன்றாக நால்வர் குடியினையும் எண்ணியுரைத்தார். அணியப்படுவனவும், உண்ணப்படுவனவும், புரக்கப் படுவனவும் கூறினமையின், பரவப்படுவன நடுகற்களன்றி வேறே கடவுளில்லை யென்றார். 336. பரணர் ஆசிரியர் பரணர் முதலிய சான்றோர், நாட்டில் போல் நிகழுங்கால் பல நல்ல ஆடவர் உயிரிழப்பதபால் நாடு சீரழிவதும் பொருட் குறையும் பசியும் பிணியுந் தோன்றி உயிர்கட்கு உலக வாழ்வைத் துன்ப நிலைய மாக்குவதுங் கண்டு போர்கள் நிகழாதவாறு வெளிப்படையாகவும் குறிப்பாகவும் போர்க்குரிய தலைமக்கட்கு வேண்டுவன அறிவுறுத்துவர். போர்கள் உண்டாதற்குரிய ஏதுக்களுள் மகட்கொடை வேண்டிய வேந்தர்க்கு மகண் மறுத்தலும் அதுவே வாயிலாகப் போருண்டாதலும் கண்டு வருந்திப் பலவகையாகப் பாடியிருக்கின்றனர். ஒரு வேந்தன் பிறனொருவன் மகனை மணஞ்செய்து கொடுக்குமாறு வேண்டுகின்றான். இவ் வேந்தன் வெஞ்சினமுடையவன். மகளைக் கொடுத்தற்குரிய தந்தை வெஞ்சினமுடைமை முதலிய ஏதுக்களைக் கருதி மகட்கொடை மறுக்கின்றாபன். அவனுடனிருக்கும் மறவர் தாமும் மறுத்தற்குத் துணையா கின்றனரேயன்றி, நேர்தற்குத் துணையாகாது வாய் வாளாதிருக்கின்றனர். வேட்ட வேந்தன் சினங்கொண்டு போர்ப்பறை முழக்குகின்றான். ஊரிற் பெருங் கலக்க முண்டாகிறது. மகளைப் பெற்ற தாயும் தன் கணவற்கு வேண்டுவன கூறிப் போரைத் தடுக்குங் குறிப்பால் ஒன்றும் கூறாளாய் அவள் விரும்பியதையே தானும் விரும்புகின்றாள்; அவளை மகள் வளர்த்துச் சிறந்தாளென்னாது பகை வளர்ததுப் பண்பிலளென்பதால், பண்பில் தாய் அறனிலள் என்று இப் பாட்டிற் கூறுகின்றார். | வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே கடவன கழிப்பிவ டந்தையுஞ் செய்யான் ஒளிறுமுகத் தேந்திய லீங்குதொடி மருப்பிற் | |