பக்கம் எண் :

273

     

பெண்மை நலம் நிறைந்த பொற்புடனே; மண்ணிய துகிவிரி கடுப்ப
நுடங்கி - கழுவப்பட்ட துகிலை விரித்தவழி அது நுடங்குவது போல
நுடங்கி; தண்ணென  அகிலார் நறும்புகை ஐது சென்று அடங்கிய -
தண்ணென்று அகிற் கட்டையினின்றெழுந்த நறிய புகையானது மெல்லச்
சென்று படிந்த; கபில நெடு நகர்க் கமழும் மணம் பொருந்திய; மனைச்
செறிந்தனள் வாணுதல் - இல்லிடத்தே செறிக்கப்பட்டாள் ஒளிபொருந்திய
நுதலையுடையவள்;     இனி -   இப்பொழுது;   அற்றன்றாகலின் -
அத்தன்மைக்கிடமன் றாதலால்; தெற்றெனப் போற்றி - தெளிவாக
வோம்பி; காய் நெல் கவளம் தீற்றி - விளைந்த நெல்லிடத்துப் பெற்ற
அரிசியாலுண்டாகிய கவளத்தை யுண்பித்து; காவுதொறும் - காக்கள்
தோறும்; கடுங்கண் யானை காப்பனர் அன்றி - வன்கண்மையையுடைய
யானைகளைக் காப்பதல்லது; வருதல் ஆனார் வேந்தர் - வருதலமைார்
வேந்தர்கள்; தன்னையர் - இவளோடு உடன்பிறந்தவர்கள்; பொருசமம்
கடந்த உருகெழு நெடுவேல் - பொருந்திய நெடிய வேலையும்; குருதி
பற்றிய வெருவரு தலையர் - பகைவரை யெறிதலால் அவர் குருதி தோய்ந்த -
கண்டார்க்கு அச்சம் தரும் தலையையுமுடையரானிர்; இவர் மறனும் இற்று -
இவரது மறப்பண்பும் இத்தன்மைத்தாய் இராநின்றது; நேரிழை உருத்த
பல்சுணங் கணிந்த - நேரிய இழையணிந்த இவட்குரிமையாகத் தோன்றிய
பலவாகிய  தேமல்  பரந்த; மருப்பு  இள வனமுலை ஞெமுக்குவோர் -
யானைக்கோடு போன்ற அழகிய இளமுலை யழுந்தப் புல்லுவோர், தெற்றென
யாராகுவர்ர கொல் - தெளிவாக யாவரோ; எ - று.


     நிரல் அல்லோர்க்கு  மகட்கொடை மறுத்தலும்  அது  வாயிலாகப்
போருண்டாதலும்       எதிர்நோக்கிப்       படைபண்ணப்படுதலின்,
“சோணாட்டண்ணல்  ஆர்கலியினன்”  என்றார்.  மண்ணாள்  வேந்தர்
என்னும் தாம் பிறரால் இரக்கப்படுவதல்லது தாம் பிறரை இரப்பதிலராதமல்
முறை; அதனை யெண்ணாது தாம் இரவலராகிய பாணர் முதலியோர் போல
வருதலின் “எண்ணார் வாள்வலத் தொழிப் பாணரிற் பாடிச் சென்றாஅர்”
என்றார். பிறர்க் கிடக் கவிந்த கை, தான் ஏந்துதற்குரிய வாளை யேந்தாது
பாடுநர் ஏந்தும் இசைக்கருவி யேந்துதல் கண்டு இகழ்வார், “கவிதை வாள்
வலத் தொழிய” என்றார். கவிகை பாடியென மமையும். அன்றிக் கவிகைச்
செல்வர் என இயைத்து இடக் கவித்த கையையுடைய செல்வரெனினுமாம்.
புகைபடிதலால் சுவர் கபிலநிறம் பெறுவதால் “கபில நெடுநகர்” என்றார்.
பாரியின் காவல் கடுமைபற்றி அவனது சுனை பிறர் காண்டற்கரிதானது பற்றி,
இற்செறிப்புண்ட பெண்ணுக்கு அதனை யுவமம் கூறினார். அண்ணல் ஆர்
கலியினன்; வாணுதல், சுனைபோலக் காண்டற்களியளாகிய மனைச்
செறிந்தனள்; இனி அற்றன்றகலின், வேந்தர் வருதலானார்;