பக்கம் எண் :

274

     

     தன்னையர் வெருவருதலையர்; மறனும் இற்று; ஞெமுக்குவோர்
யாராகுவர்கொல் என இயைத்து வினைமுடிவுசெய்க.

     விளக்கம்: இப் பாட்டின்   முற்பகுதி   அச்சுப்பிரதியில்  சிதறிக்
கிடக்கின்றது. வேள்பாரியொடு பகைத்துப் பன்னாள் முற்றியிருந்தும் வென்றி
யெத்மாட்டாராகிய வேந்தர்க்குப் பண்டு கபிலர், “சுகிர்புரி நரம்பின் சீறியாழ்
பண்ணி,  விரையொலி  கூந்தனும்  விறலியர் பின்வர, ஆடினிர் பாடினிர்
செலினே, நாடுங் குன்று மொருங்கீ யும்மே” எனவும், “யாமும் பாரியு முளமே.
குன்று முண்டு நீர் பாடினிர் செலினே” (புறம். 109. 110) எனவும் கூறினாராக,
அவர்    குறிப்பறியாது    பட்டாங்கே    கொண்டு     மகட்கொடை
வேண்டிவந்தனரென்னும்  குறிப்புத்  தடக்கைப் பாரி”  என்றாரென  வறிக.
பாரியினது பறம்பின்கண்ணதாகிய சுனை மிக்க அருமையும் பெருமையுமுடைய
தென்பதைப் பிறரும், “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்” (புறம். 176)
என்று கூறுதல்  காண்க.  களவிற்  கொண்டு   தலைக்கழிதல்   முதலிய
செயல்கட்கு இப்போது இடமில்லையென்பார், “அற்றன்றாகலின்” என்றார்.
காக்களில் மரந்தொறும் களிற்றைப் பிணித்துக் காத்தலைச் செய்வதையன்றி
மகள் வேண்டி வருதலிலும் கையொழி யாராயின ரென்பார், “காப்பனரன்றி
வருதலானார் வேந்தர்” என்றார். வேந்தரெனப் பன்மையாற் கூறியது.
மகட்கொடை வேண்டிவருவோர் சான்றோர் உப்படப்பலராதல் தோன்ற
“இற்றால்” என்றது, மகண்மறுத்தல் ஒருதலை யென்றவாறு.

338. குன்றூர்கிழார் மகனார்

     குன்றூர்   என்பது   ஓரூர்.   இவ்வூரினரான  குள்றூகிழார் பெயர்
இன்னதெனத்   தெரிந்திலது.  நற்றிணையில்   குன்றூர்கிழார்   மகனார்
கண்ணத்தனாரென  ஒருவர்  காணப்படுகிறார்.  இங்கே  குன்றூர்கிழார்
மகனாரென்றே காணப்படினும், கண்ணத்தனார் என்ற இவரது இயற்பெயர்
ஏட்டில் விடுபட்டதாகக் கருதுதற்கிடமுண்டு. அவர் காலத்தே நெடுவேளாதன்
என்பான் சோழநாட்டிற் போந்தை யென்னும் ஊர்க்குரியனாய் விளங்கினான்.
இச் சான்றோரை அவன் பரிசு நல்கிச்சிறப்பித்துள்ளான். இவர் ஒருகால்
ஓரூரிலுள்ள தலைவன் மகள் மணப்பருவ மெய்த்திருப்பது கண்டு, அவள்
தந்தை தன்னையருடைய மறப்பண்பையும் உடனுணர்ந்து இவளால் இவ்வூரில்
கடும்போர் நிகழும் என எண்ணி மகட்கொடை வேண்டுவோர் இவள்
தந்தையின் தகுதிக் கேற்ற வணக்கஞ்செய்து இவளைத் தரப் பெறுக எனக்
குறிப்பிற் பெறவைத்து இப் பாட்டினை வழ்குகின்றார்.

 ஏர்பரந்தவய னீர்பரந்த செறுவின்
நென்மலிந்தமனைப் பொன்மலிந்தமறுகிற்
படுவண் டார்க்கரும் பன்மலர்க் காவின்
நெடுவே ளாதன் போந்தை யன்ன
 5.பெருஞ்சீ ரருங்கொண் டடியளே கருஞ்சினை
 வேம்பு மாரும் போந்தையு மூன்றும்
மலைந்த சென்னிய ரணிந்த வில்லர்