பக்கம் எண் :

275

     
 கொற்ற வேந்தர் வரினுந் தற்றக
வணங்கார்க் கீகுவ னல்லன்வண் டோட்டுப்
 10. பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற்
 றுணங்குகல னாழியிற் றோன்றும்
ஓரெயின் மன்ன னொருமட மகளே.

     உரை: வண்தோட்டுப் பிணங்கு கதிர் கழனி நாப்பண் - வளவிய
தோட்டினையும்  ஒன்றோடொன்று  தம்மிற்  பின்னிக் கிடக்கும் கதிர்
களையுமுடைய கழனிகட்கு நடுவே; ஏமுற்று உணங்கு கலன் ஆழியின்
தோன்றும் - கரையிற் பிணிக்கப்பட்டு உலர்ந்து தோன்றும் மரக்கலமும்
கடலும்போலக் காட்சியளிக்கும்; ஓர் எயிர் மன்னன் ஒரு மடம்களே -
ஒற்றை மதில் சூழ்ந்த நகரிடத்தேயுள்ள வேந்தனுடைய இளையளாகிய ஒரு
மகள்; ஏர் பரந்த வயல் - ஏர்கள் உழுத வயல்களையும்; நெல் மலிந்த மனை
- நெல் நிரம்பிய வீடுக ளையும்; பொன் மலிந்த மறுகின் - பொன் நிறைந்த
தெருக்களையும்; படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின் - மொய்க்கின்ற
வண்டுகள் ஒலிக்கும் பலவாகிய மலர்களையுடைய சோலைகளையுமுடைய;
நெடுவேள் ஆதன் போந்தை  யன்ன -  நெடுவேள்  ஆதன்  என்பானது
போந்தை யென்னும்   ஊரைப்போன்ற;   பெருஞ்சீர்  அருங்கொண்டிள் -
பெருத்த சீருடனே  அரும்போர்  உடற்றிப்  பகைவரிடத்தே  கொண்ட
செல்வமுடையவளாவள்; கருஞ்சினை வேம்பும் - கரிய கொம்புகளையுடைய
வேப்பமாலையும்; ஆரும் - ஆத்தி மாலையும்; போந்தையும் மூன்றும் -
பனந்தோட்டு மாலையுமாகிய மூன்றையும்; மலைந்த சென்னியர் - சூடிய
தலையையுடையராய;    அணிந்த   வில்லர் - வரிந்து   கட்டப்பட்ட
வில்லையுடையராய்; கொற்ற வேந்தர் வரினும் - வெற்றி மிக்க முடி வேந்தர்
மூவரும் மகட்கொடை வேண்டி   வந்தாலும்;   தன்   தகவணங்கார்க்கு
ஈகுவனல்லன் - தன்    தகுதிக்கேற்பத்  தன்னை   வணங்கி   இரந்து
கேட்டார்க்கல்லது இவள் தந்தை தகுதிக்கேற்பத் தன்னை வணங்கி இரந்து
கேட்டார்க்கல்லது இவள் தந்தை இவள் மகட்கொடை நேரான்; எ - று.


     பள்ளப்பாங்கான   நன்செய்   வயலென்னும்,  மேட்டுப்பாங்கு
செறுவென்றும் தெரிந்துணர்க. வயலும் செறுவும் மனயைும் மறுகும்
காவுமுடைய போந்தையென இயையும். பெருஞ்சீரும் அரிய போர் செய்து
பகைவரிடத்தே கொண்ட பெருஞ்செல்வமும் தன் மகட்குத் தந்தையால்
தரப்படுதலின், “பெருஞ்சீரருங் கொண்டியள்” என்றார்; இனி, பெரிய
சீருடனே கோடற்கரிய கொள்மகளாயினளெனினுமாம். கொள்மகள், மணந்து
கோடற்கரிய கொள்மகளாயினளெனினுமாம். கொள்மகள், மணந்து
கோடற்குரிய செவ்வியெய்தினவள். ஓரெிற்குக்கலுனும், கழனிக்கு ஆழியும்
உவமம். செல்லும்வலியழிந்தமையின் கரையிற பிணிக்கப்பட்டிருக்கும்,