பக்கம் எண் :

276

     

     கலம், “ஏமுற் றுணங்கு கலன்” எனப்பட்டது மருதஞ்சான்ற சீறூர்
மன்னன் என்றதற்கு, “வண்டோட்டு...ஓரெயில் மன்னன்” என்றார். சீறூர்
மன்னனை ஓரெயில் மன்னென்றலும் வழக்கு. “முரவு வாய் ஞாயில் ஒரெயில்
மன்னன்” (அகம். 373) என்று பிறரும் கூறுவது காண்க. மன்னன் ஒரு
மடமகள், அருங் கொண்டியள்; அவளை வேந்தர் வரினும் தன்தக
வணங்கார்க் கீகுவனல்லன்; ஆதலால் மகட்கொடை வேண்டினோர்
வணங்கிப் பெறுக என்பது குறிப்பு.

     விளக்கம்: போந்தையென்ற பெயருடைய வூர்கள் தமிழ்நாட்டில்
பல பகுதிகளிலும் உள்ளன. இப் போந்தை யென்னும் ஊர் மிறைக்கூற்றத்துப்
போந்தை யென்று கல்வெட்டுகளில் (A. R. No. 5 of 1920) கூறப்படுகிறது.
குறும்பொறை நாட்டிலும் ஓய்மா நாட்டிலும் உள்ளவை பொற்போந்தை (S. I. I.
Vo XII. No. 97) யென்றும், அரும்போந்தை (A. R. No. 33 of 1919)
யென்றும் குறிக்கப்டுகின்றன. மிறைக்கூற்றத்துப் போந்தைக் கண்மையில்
ஆதமங்கலம் (A. R. No. 193 of 1927-8) என்றோர் ஊர் இருத்தலால்,
நெடுவேளாதனது  போந்தை   மிறைக்   கூற்றத்துப்   போந்தையாதல்
வேண்டுமென்று கருதப் படுகிறது. மிறைக்கூற்றம் திருப்பழனம் முதலிய
வூர்களைத் தன்பால் உடையது. வேளிர் குடியிற் சிறந்து விளங்கியவன்
என்பது தோன்ற, ஆதன் நெடுவேளாதன் எனப்படுகின்றான்: இவ்வாறு
நெடுவேள் எனச் சிறப்பிக்கப்படுகிறவன், பொதினி நகர்க்குரியனும் வேளிர்
தலைவனுமான ஆவி யென்பானவன்: அவன் நெடுவேன் ஆவி எனப்படுவது
(அகம். 1) ஈண்டு நினைவு கூரத்தக்கது. வயலும் செறுவும் மனையும் மறுகும்
கலமும்  பிறவும்  சிறப்பித்துக்  கூறலின்,  இப் போந்தை  அந்நாளில்
மேன்மையுற்ற நகரமாக இருந்ததென்பது தேற்றம். மினளயும் அகழியமாகிய
அரண் பிற இல்லாமையின், “ஒரெயில்” என்றார்.

339. மகட்பாற் காஞ்சி

     ஓரூரில் வாழ்ந்த தலைமகன் ஒருவனுடைய மகள் மணத்திற்குரிய
செல்வி யெய்தலுற்றாள். அவளது உருநலங்கண்ட வேந்தர் பலர் அவளை
மணந்துகொள்ள முயல்வராயினர். மறக்குடியிற் றோன்றிய மாண்புடைய
அவள்தந்தை தன்னோடொத்த மாண்புடையார்க்கே அவளை மகட் கொடை
நேருங் கருத்தினனாய்  இருந்தான்.  தந்தையின்  கருத்துக்கேற்ப  மக்ட
கொடை வேண்டும் வேந்தர் மாணாராயின் போர் நிகழும் என்பது ஒருதலை.
இதனைக் கண்ட சான்றோர் ஒருவர், அப் பெண்ணின் இள நலமும்
அவளை மணக்க விழையும் வேந்தர் மன விருப்பமும் அறிந்து, “இவள்
வேந்தர் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டாள்; அதனால் போர்
நிகழுமென்பதையறிந்தும் அவள் அதனை விரும்புவாள் போன்றனன்;
அவள் இன்னும் செவ்வி நிரம்பிற்றிலள்; அது நிரம்புதற்கு இவள் மேலும்
பன்னாள்  வளர்தல் வேண்டும்” என இப்பாட்டல் விரும்பிக் கூறியுள்ளார்.
இச் சான்றோர் பெயர் தெரிந்திலது. இப் பாட்டும் இடையிடையே
சிதைந்துள்ளது.

 வியன்புலம் படர்ந்த பல்லா நெடுவேறு
மடலை மாணிழ லசைவிடக் கோவலர்
வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்