| 5. | நெடுநீர்ப் பரப்பின் வானையொ டுகளுந்து | | தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர் கடலாடிக் கயம்பாய்ந்து கழிநெய்தய் பூக்குறூஉந்து பைந்தழை துயல்வருஞ் செறுவிற் றதைந்த | 10. | .............................கலத்தின் | | வளர வேண்டு மவளே யென்றும் ஆரம ருழப்பது மமரிய ளாகி முறஞ்செவி யானை வேந்தர் மறங்கெழு நெஞ்சம் கொண்டொளித் தோளே. |
திணையும் துறையுமவை...
உரை: வியன் புலம் படர்ந்த பல்லா நெடு வேறு - அகன்ற புல் வளர்ந்த நிலத்திற் பரந்து மேய்ந்த பல ஆக்களோடு கூடிய நெடிய ஆனேறுகள்; மடலை மாணிழல் அசைவிட - பூக்களை யுடைய மரங்கள் பயந்த பெரிய நீழவில் தங்கி யசையிடாநிற்க; கோவலர் தீதை முல்லைப் பூப் பறிக்குந்து - கோவலர் பூக்கள் நெருங்கிய முல்லையினுடைய பூவைப் பறிக்கும்; குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் - குறுகிய கோலால் எறியப் பட்ட நெடிய காதுகளையுடைய குறுமுயல், நெடுநீ்ர்ப் பரப்பின் வாளையொடு உகளுத்து - ஆழ்ந்த நீர்நிலையிலுள்ள வாளை மீன்களோடு ஒப்பத் துள்ளித் தாவும்; தொடலை மல்குல் தொடித்தோள் மகளிர் - மேகலை யணிந்த அல்குலையும் தொடியணிந்த தோளையுமுடைய பெண்கள், கடலாடி - கடல் நீரில் விளையாடி; கயல் பாய்ந்து - கானற் சோலையிலுள்ள குளத் தில் மூழ்கி; கழி நெய்தற் பூக்குறூஉந்து - கழியிடத்துப் பூத்த நெய்தய் பூக்களைப் பறிக்கும்; செறுவில் ததைந்த வயலிடத்தே நெருங்கயி; பைத்தழை துயல் வரும் - பசிய தழை யசையும்;..........கலத்தின் - ............கலத்தைப்போல; அவள் என்றும் வளரவேண்டும் - எப்போதும் அவள் வளரவேண்டியவளாக இருத்தலை இவ்வூரவர் வேண்டாநிற்பர்; ஆரமர் உழப்பதும் அமரியளாகி - தன் பொருட்டு வேந்தர்கள் கடத்தற்கரிய போர் செய்வதை விரும்பினவள்போல்; முறஞ்செவி யானை வேந்தர் - முறம்போலும் செவியையுடைய யானைகளையுடைய வேந்தர்களின்; மறங்கெழு நெஞ்சம் கொண்டடொளித்தோள் - மறம் பொருந்திய நெஞ்சைக் கவர்ந்து புறத்தே எவரும் காணாவாறு ஒளித்துக்கொண்டாளாகலான்; எ - று.
ஒளித்தாளாகலான், வளரவேண்டும் என வினைமுடிவு செய்க. ஒளித்தாள் என்புழி ஆகாரம் செய்யுளாகலின் ஓவாயிற்று. பறிக்கும், உகளும், |