| குறூஉம் என வரும் செய்யுமென் விளையிடத்து உம் உந்தாயிற்று. மடல் பூ, பூக்களையுடைய மரம் மடலையெனப்பட்டது நெட்டேறு, நெடு வேறு என வந்தது. ததைதல், நெருங்குதல்; செறிதலுமாம். வீததை கானல் (குறுந். 304) என்றாற்போல, மேய்ந்த நிரைகள் மரநீழலிற் றங்கி யசையிடாநிற்ப, கோவலர் வறிதிராது முல்லைப் பூக்களைப் பறித்துக் கண்ணி தொடத்து அணிந்து மகிழ்வது இயல்பு. குறுமுயல் நிலத்தில், வாளை நீர்ப்பரப்பிலும் உகளுமென வறிக. கடலாடிய உவர் நீங்கக் கயம் படிவது நெய்தல் நிலத்து நிகழ்ச்சி. நாடோறும் பெண்மை நலஞ் சிறந்து வருதலால், தன்னலம் விரும்பி வரும் வேந்தராற் போருண்டாதலை விரும்பினான் போன்றாள் என்பார், ஆரம ருழப்பது அமரிய ளாகி யென்றார். யானையின் செவிக்கு முறம் உவமை; முறஞ்செவி யானையுந ் தேருமாவும் (மணி. 19:121) என்பது காணக். வேந்தரது மறங்கெழு நெஞ்சைக் கொண்டொளியாளாயின், அவர் மகட்கொடை வேண்டிப் போர்குறித் தெழாரென்பது கருத்து. வளர்ச்சி முற்றியவழி வேந்தர் வருதலும் அதுவே யேதுவாகப் போருண்டாதலும் ஒருதலையாகலின், முற்றாத இளையளாகவே யிருத்தல் வேண்டுமென்பார், வளர வேண்டுமவளே யென்றும் என்றார்.
விளக்கம்: செறுவிற்றதைந்த...கலத்தின் என இடம்விட்டே ஏட்டிலும் எழுதப்பட்டுளது. புலம்படர்ந்த நெடிய ஏறுகள் புல்லை மேய்ந்து மரநிழலிற் றங்கி அசைவிடாநிற்ப, மேய்க்கும் கோவலர் முல்லைப்பூவைப் பறித்தணிந்து கொள்ளாநிற்ப, குறுமுயல் கரையிட்ட்துத் தாவியோட, நீர்நிலையில் வாளைமீன் உகள, மகளிர் கடலாடிக் கழிகளிற் பூத்தபூக்களைப் பறித்துத் தழை தொடுத்தணிய இன்பபே நிலவும் ஊர் எனக் கொள்க. கலத்தின் வளரவேண்டும் என்றவிடத்து உவமப்பொருளை விளக்கும் தொடர்கள் விடுபட்டமையின், வளரவேண்டும் என்றதன் கருத்து விளங்கவில்லை. வரைய வேண்டும் என்று பாடமாயின். மகட்கொடையிரந்து பெற்று வேந்தர் தாம் மணக்கக் கருதும் கருத்தைக் கைவிடவேண்டும் என்றாதல், உற்றார்க்குத் தந்தை வரைவுடன்படுதல் வேண்டுமென்றாதல் உரைக்க தந்தை தன்னையர் செயலால் வேந்தர் சேட்படுக்கப்பட்ட வழியும், விடாது மகட்கொடையை வேட்டவண்ணமிருத்தல் தோன்ற, வேந்தர் மறங்கெழு நெஞ்சங்கொண்டு என்றும், தான் கவர்ந்து கொண்ட திறத்தைப் புலப்படுத்தாது இல்லிடத்தே யொடுங்கினாளாகலின், ஒளித்தோள் என்றும் மறங்கெழு நெஞ்சத்தைக் கவர்ந்துகொண்டொளித்தமையின், அவ்வேந்தர் மகண் மறுத்தவழி மானம்பொறாது மறத்தீக்கிளரப் பொருவது ஒருதலையாதல்பற்றி, அறத்தொடு நின்று பெற்றோரை வரைவுடன் படுப்பதோ கொண்டு தலைக்கழிதற் குடம்படுவதோ செய்யாமையின், அவளை, ஆரமருழப்பதும் அமரியளாகி என்றும் கூறினார். அமர்தல், விரும்புதல். அமருழப்பது அவள் பொருட்டாகலின், அமரியளாகி என்றார். காதற் காமவயப்பட்டான் ஒருவன், காதலியை, என்நிறையரு நெங்சங் கொண்டடொளித்தோளே (ஐங். 191) என்று கூறுதல் காண்க. |