| நினக்கு எம்மை யெதிரேற்றுப் பரிசில் கொடாது மறுத்த பிறரது கொடுமையை விரியக் கூறினேன். கூறவும், நீ நின் கருத்திற் கொண்டவாறே செய்து முடித்துவிட்டாய். முன்னாள் நீ செய்த குறிப்பால் பரிசில் என் கைக்கு வந்துவிட்டதென்றே நான் கருதச்செய்தாய்; பின்னாள் அது குறித்து ஏமாந்து வருந்துமாறு என்னைச் செய்தாய். என் வருத்தங் கண்டு நீ சிறிதும் நாணாயாயினை. யானோ நீ நாணுமாறு என் நாவால் நின் புகழைப் பன்முறையும் பாடினேன்; என் பாடுபுகழை நீ ஏற்றுக் கொண்டாய். உண்ண உணவின்மையின் என் மனையில் வாழும் எலிதானும் பசித்து மடிந்து கிடக்கும் சுவரைச் சார்ந்து என் மனைவி மெலிந்திருக்க, பாலில்லாமையால் மார்பிற் பால் சுவைத்து அது பெறாது பாலுண்டலையே மறந்தொழிந்த நிலையிலிருக்கும் பிள்ளையையுடைய அவளைநினைந்து கொண்டு செல்கின்றேன். செல்லும் யான் நின்னைத் தொழுது விடைபெற்றுப் போகின்றேன் என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடினார்.
இப்பாட்டைப் பாடிய இரண்டொருநாள் கழிந்தபின்னரும் சேரமான் பரிசில் நீட்டித்தானாக, மன்பதை காக்கும் என்று தொடங்கும் பாட்டைப் பாடி நீங்கினார். இப்பாட்டுக்கள் பலவும் வரலாற்று முறை பற்றித் தொடுக்கப்பட்டன வல்லவென முன்பே கூறினோம், கடைப் பிடிக்க.
| அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலே றணங்குடை யரவி னருந்தலை துமிய நின்றுகாண் பன்ன நீண்மலை மிளிரக் குன்றுதூ வெறியு மரவம் போல | 5 | முரசெழுந் திரங்குந் தானையொடு தலைச்சென் | | றரைசுபடக் கடக்கு முரைசா றோன்றனின் உள்ளி வந்த வோங்குநிலைப் பரிசிலென் வள்ளியை யாதலின் வணங்குவ னிவனெனக் கொள்ளா மாந்தர் கொடுமை கூறநின் | 10 | உள்ளியது முடித்தோய் மன்ற முன்னாட் | | கையுள் ளதுபோற் காட்டி வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் நாணா யாயினு நாணக் கூறியென் நுணங்கு செந்நா வணங்க. வேத்திப் | 15 | பாடப் பாடப் பாடுபுகழ் கொண்டநின் | | ஆடுகொள் வியன்மார்பு தொழுதனென் பழிச்சிச் செல்வ லத்தை யானே வைகலும் வல்சி யின்மையின் வயின்வயின் மாறி இல்லெலி மடிந்த தொல்சுவர் வரைப்பிற் | 20 | பா அ லின்மையிற் பல்பாடு சுவைத்து |
|