பக்கம் எண் :

296

     

     நீர் நிறைந்த  கடலுமாம்.   கூடலென்ற   பெயர்   கொண்டவூர்கள்
தமிழகத்திற் பல  இருத்தலின்,  அகுதையின் கூடல்  இன்னதெனத் துணிய
முடியவி்ல்லை. அகுதை ஒரு வேளிர் தலைவன்; அவன் கோசர்களைத் தன்
படைமறவராகக் கொண்டிருந்தான். அவனது நாடு கடற்கரைப் பகுதிசை்
சேர்ந்ததென, “குண்டு நீர் வரைப்பு” என இப் பாட்டினும், “நெய்தலஞ்
செறுவின் வளங்கெழு நன்னாடு” (அகம். 113) என்று கல்லாடனார் பாட்டிலும்
கூறுப்படுதலால்.  அறிகின்றோம்.  இவ்வகையில்  அகுதையின்  கூடல்,
மேற்காநாட்டுக் கூடல் (A. R. 62 of 1918) என்றும் கூடன்மங்கலம் (S. I. I.
Vol. VII No. 757) என்றும் கூறப்படும் கூடலூராகக் கொள் ளலாம். அஃது
இப்போது கடலூர் (Cuddalore O.T.) எனப்படும் பேரூராகும்.

348. பரணர்

     மகட்கொடை வேண்டி வந்தோர்க்குத் தந்தையும் தன்னையரும் மகள்
மறுத்தமையின், போர் நிகழுமென்பது ஒருதலையாகத் துணியப் பட்டது.
வந்தோர் ஊரிடத்தேயுள்ள பெருந்துறைக்கண் தம் களிறுகளைக் கொணர்ந்து
ஆங்குள்ள மரந்தோறும் அவற்றை நிறுத்திப் பிணித்தனர்; போர்க்குரிய
குறிப்புக்கள் தோன்றியதும் களிறுகள் மரங்களை யீர்த்துச் சவட்டத்
தலைப்பட்டன. இது கண்ட  சான்றோராகிய  பரணர்  இ்ந்த  மகள்
பொருளாகவன்றோ இவ்வூரின்கட்போரும், அதனால் ஊர்க்குக் கேடும்
உண்டாகவிருக்கின்றன. இவளை இவளுடைய தாய் பெறாதிருப்பாளாயின்
நன்றாம்; பெற்று வளர்த்து விட்டமையின் அது கழிந்தது என இரங்கிக்
கூறுவாராயினர்.

 வெண்ணெல் லரிஞர் தண்ணுமை வெரீஇக்
கண்மடற் கொண்ட தீந்தே னிரியக்
கள்ளரிக்குங் குயஞ் சிறுசின்
மீன்சீவும் பாண்சேரி
 5.வாய்மொழித் தழும்ப னூணூ ரன்ன
 குவளை யுண்க ணிவளைத் தாயே
ஈனா ளாயின ளாயி னானாது
நிழறொறு நெடுந்தேர் நிற்ப வயின்றொறும்
 10. வருந்தின மன்னெம் பெருந்துறை மரனே.

     திணையும் துறையும் மவை. பரணர் பாடியது.

     உரை: வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ - வெண்ணெல்லை
யறுக்கும் தொழுவர் தொடக்கத்தே இசைக்கும் தண்ணுமையோசை
கேட்டஞ்சி;கண் மடல் கொண்ட தீந்தேன் இரிய - கணுவிடத்தே தோன்றும்
மடலிற் கட்டப்பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள்
நீங்கியதனால்; கள்ளரிக்கும் குயம் - தேனடையிலுள்ள தேனை
வடித்துக்கொள்ளும் குயவர் சேரியும்; சிறு