நிலையாமையாகிய அறத்தை வற்புறுத்தினான் என்றும் கோடற்கு இடமுண்டு. இவர் பாடிய இப் பாட்டொன்று தவிர வேறே பாட்டுக்கள் தொகை நூல்களிற் காணப்படவில்லை. | பெரிதாராச் சிறுசினத்தர் சிலசொல்லாற் பலகேள்வியர் நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர் கலுழ்நனையாற் றண்டேறலர் | 5. | கனி குய்யாற் கொழுந்துவையர் | | தாழுவந்து தழுஉ மொழியர் பயனுறுப்பப் பலர்க்காற்றி ஏமமாக விந்நில மாண்டோர் சிலரே பெரும கேளினி நாளும் | 10. | பலரே தெய்யவஃ தறியா தோரே | | அன்னோர் செல்வமு மன்னிநில்லா தின்னு மற்றதன் பண்பே யதனால் நிச்சமு மொழுக்க முட்டிலை பரிசில் நச்சுவர நிரப்ப லோம்புமதி யச்சுவரப் | 15. | பாறிறை கொண்ட பயந்தலை மாறுதகக் | | கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி புலைய னேவப் புனமே லமர்ந்துண | 20. | டழல்வாய்ப் புக்க பின்னும் | | பலர்வாய் திராஅர் பகுத்துண்டோரே. |
திணையும் துறையுமவை. தந்துமாறனைச் சங்கவருண ரென்னும் நாகரையர் பாடியது.
உரை: பெரிதாராச் சிறு சினத்தர் - மிகைபட வுண்ணாத சிறிதே சினமுடையவரும்; சில சொல்லால் பல கேள்வியர் - சிலவாகிய சொற்களைச் சொல்லுதலோடு பல பொருள்களைச் சான்றோர் சொல்லக் கேட்டலையுடையவரும்; நுண்ணுணர்வினால் பெருங்கொடைர் - நுண்ணுணர்வோடு பெருங்கொடை வழங்குபவரும்; கலுழ் நினைால் தண் தேறலர் - கலங்கிய கள்ளோடு தண்ணிய கட்டெளிவை யளிப்பவரும்; கனி குய்யால் பொழுந்துவையர் - கனிந்த தாளிதத்தோடு கூடிய கொழுவிய துவையலைப் பிறர்க்களிப்பவரும்; தாழுவந்து தமூஉமொழியர் - எல்லோர்க்கும் பணிவை விரும்பி அவரை வணங்கிய சொல்லால் தழுவிப் பேசும் இன்சொல்லையுடையவருமாய்; பலர்க்குப் பயனுறுப்ப ஆற்றி - பலர்க்கும் பயனுண்டாகத்தக்க செயல்களைச் செய்து; இந் நிலம் ஏமமாக |