| குறுநரியும் ஈர்ந்து நிணந் தின்பதைக் காட்டுகின்றார்; வேண்டும், நிணத்தை ஆரவுண்ட பேய்மகளிர் சுடுகாட்டில் பிணஞ் சுட்டெரியும் கொள்ளிக் கட்டையின் ஒளியை விளக்காகக் கொண்டு கால் பெயர்த்தாடிக் கூத்தாடுவரெனவும், அது காண்பார்க்கு அச்சம் தருமெனமவும் குறிப்பார், களரி மருங்கித் கால்பெயர்த்தாடி, ஈம விளக்கின் வெருவரம் அமைத்த மன்றம். இதன்கண் கிடக்கும் மரக்கட்டை யெரியுற் கால் உண்டாகும் ஒளியை விளக்காகக்கொண்டு களரி மன்றத்தைச் சூழ்வந்து கூத்தயரும் என்றுமாம். எனவே, இத்தகைய இடத்துக்கு யாவரும் செல்ல விரும்பா ரென்பது தேற்றம். ஆயினும், கண்ணுக்கினிய காட்சி வழங்கும் கடலும் வயலும் காடும் மலையும் பொருந்திய நாடுகளின் வளமும் நலமுமாகிய இவை தமக்கேயுரியவாதல் வேண்டுமென விழைந்து கைப்பற்றிக் கொண்ட முடியொடு விளங்கும் பெரு வேந்தரும் முடிவில் இம் முதுகாட்டையே அடைந்தனரென்பார், காடு முன்னினரே நாடு கொண்டோரும் என்றார். நீ யெய்திய புகழ் ஒன்றே இவ்வுலகில் நீடு விளங்கி நிற்பதென வற்புறுத்துகின்றாராதலால், அப் புகழைப் பயக்கும் கொடையினை, நிலவுக்கோட்டு...விடுவையாயின் என்றார். 360. தந்துமாறன் தந்துமாறன் என்பான் பாண்வேந்தர் ஆணைவழி நின்ற தலைவர்களுள் ஒருவன்; இவன் நல்லொழுக்கமும் சான்றோர் உரைக்கும் சால் புரைகளிற் பேரீடுபாடும் உடையவன். மிக்க செலவத்தால் நற்புகழ் நிறுவிச் சிறக்கும் இவனைச் சங்கவருண ரென்னும் நாகரியர் கண்டு இவ்வறைவுரையை வழங்கியுள்ளார். இதன்கண் சிறு சினமும், பல கேள்வியும், நுண்ணுணர்வும் பெருங் கொடையும் பணிமொழியுமாகிய நற்பண்பு நற்செய்கைகளால் பலர்க்குப் பயன்பட வாழ்ந்து இன்பமாக அரசியல் நடத்திய வேந்தர் மிகச் சிலரேயாவர்; அவ்வாறு வாழ்வதை யறியாதவர் பலர்; அவர்தம் செல்வம் நிலை பெற்றதில்லை; இக்காலத்தும் அதன் பண்பு அத்தன்மையாகவேயுளது; அதனால் நீ ஒழுக்கம் குன்றாமல், இரவலர் இன்மை தீரக் கொடுத்தலைக் கைவிடா தொழிக; மேற் கூறிய ஒழுக்கக் குறைவின்றித் தாம் உடையது பகுத்துண்டு வாழ்வோருள்ளும் ஈமத்தின்கண் எரிவாய்ப்புக்க பின்னும் புகழ் வாய்த்திலர் பலர் எனச் சொல்லித் தெருட்டியுள்ளார்.
சங்கவருணர் என இச் சான்றோர் ஈண்டு வழங்கப்பட்டன ராயினும், இவரது இயற்பெயரை நாகரையர் என்று உணர்தற் கேற்பச் சங்கவருண ரென்னும் நாகரையர் எனப்படுகின்றார். இவர் பெயர் நாகரிகரென்றும் காணப்படுகிறது. சங்கவருண னென்பதற்கு வனைவணன் என்பது தமிழ். இப் பெயர் இங்கே வடமொழியில் மொழி பெர்க்கப்பட்டுள்ளது. வளைவணன் என்றொரு நாகநாட்டரசன் மணி மேகலையிற் காணப்படுகின்றன். இப்புலவர் பெயரும் நாகரையர் எனக் காணப்படுவதால். இவர் நாகநாட்டிற் பிறந்து தமிழகமடைந்து சான்றோர் குழுவிடை யிருந்தா னென்றும், அக்காலத்தே தந்து மாறனைக் கண்டு இப் பாட்டால் |