பக்கம் எண் :

318

     

நினக்கும் வைகல் வருதல் அற்று நினக்கும் காடு முன்னும் நான் வருதல்
அத்தன்மைத்தாம்; வசையும் நிற்கும் இசையும் நிற்கும் இவ்வுலகில் ஒருவன்
செய்த பழியும் நிலைபெறும்; புகழும் நிலைபெறும் அதனால் -; வசை நீக்கி
இசை வேண்டிய - பழி நீக்கிப்புகழ் நிறுவியும், நசைவேண்டாது நன்று
மொழிந்தும் - கைக்கூலி பெற்றக் கோடுதலை விரும்பாது நடுவுரையாகிய
அறமே மொழிந்தும்; நிலவுக் கோட்டுப் பல களிற்றோடு விளங்குதலையுடைய
கொம்புகளையுடைய பலவாகிய களிறும்; பொலம்படைமா - பொற்
கலண்ணிந்த குதிரைகளும்; மயங்கிட கலந்து வர; இழைகிளர் நெடுந்தேர் -
பொன்னிழை யணிந்த நெடிய தேர்களை, இரவலர்க்கு அருகாது கொள்ளென
விடுவையாயின் - கொள்வீராகவென இரவலர்க்கும் குறைவறக் கொடுத்துச்
செல்லவிடுவாயாயின்; வெள்ளென - வெளிப்படையாக; நீ ஆண்டுப் பெயர்ந்த
பின்னும் - நீ மேலுலகத்துக்குச் சென்ற பின்னரும்; நீஎய்திய புகழ் - நின்
ஈகையாலுளதாரும் புகழ்; ஈண்டு நீடு விளங்கும் - இவ்வுலகில் நெடிது
நிலைநிற்கும்; எ - று.


     இது யாக்கை நிலையாமை கூறி்ப் புகழுண்டாக வாழ்தலை வற்புறுத்தியது.
பேணுவாரற்ற பாழிடமென்றற்குப் “பாறுபடப்ப றைந்த பன்மாறு மருங்கின்”
என்றார். மாறு வற்றியுலர்ந்த முட்கள் உயர்த்தியும் தாழ்த்தியும் உருட்டியும்
குழறும் கூகையின் குரலை, “வேறுபடு குரல்” என்றார். பிணத்தின் ஊன்
குருதியின்றி வெளுத்திருக்கும் மாகலின், “விளரூன்” எனபப்ட்டது. களரி -
ஈண்டுப் பிணஞ் சுடும் இடம்; களர் நிலமுமாம். பொதுச்சொல் பொறாது
மைந்து மலிந்து பிற நாடுகளைத் தம் ஒரு  குடைக்கீழ்க்  கொணர்ந்த
முடிவேந்தரை, “நாடு கொண்டோர்” என்றார். வைகல். நாள். உலகியலில்
பகலும் இரவும் நிலைபெறுமாறுபோல, இசையும் வசையும் நிலைபெறுவதனால்,
“இசையும் நிற்கும் வசையும்  நிற்கும்” என்றார்.  வசைக்கேது  நசைமயும்
இசைக்கேது நன்றுமாதலின், “நசை வேண்டாது நன்று மொழிந்து” என்றாரென
அறிக. நசை பொருண்மேனின்று தீநெறியிற் செலுத்தவது. வெள்ளெனல்
வெளிப்படையாக   யாவரும்   காண  விளங்குதல். கூகையொடு குறுநரி
பல்லவாய்ப்போருங் காடு, பேய் கொண்டோரும் காடு முன்னினர்; நினக்கும்
அற்று; நிற்கும், நி்ற்கும்; வேண்டியும் மொழிந்தும், விடுவையாயின்,
வெள்ளெனப் பெயர்ந்த பின்னும், புகழ் நீடு விளங்கும் எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.

     விளக்கம்: பெருங் காஞ்சியாவது “மலையோங்கிய மாநிலத்து,
நிலையாமை நெறியுரைத்தன்று” (பு, வெ. மா. 10:2) என வரும், அந்துவன்
கீரனுக்கு ஆசிரியர் காவிட்டனார் இப் பாடல் நிலையாமையை வற்புறுத்தி,
நிலையாமைகொண்டு நிலையுதலுடையவற்றைச் செய்துகோடல் வேண்டுமெனக்
கூறுகின்றார். முதற்கண் நிலையாமை காட்டும் முது காட்டின் இயல்பை
எடுத்தியம்புவாராய், முதுகாட்டில் கூகையும் குறுநரியும் பேய் மகளிரும்
இருக்கும் இருப்பை விளக்குகின்றார். கூகை குழறா நிற்ப, பிணங்களை
ஒருபால் பேய்மகளிரும், ஒருபால்