| சேரும் படர்கூர் மாலையும், அனதை்தும் அடூஉ நின்று நலிவும் (அகம். 378) என வகுத்துக் கூறும் இவரது அகப்பாட்டு இவரது புலமை நலத்தைக் காட்டி இன்புறுத்துகின்றது. | பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின் வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையொடு பிணந்தின் குறுநரி நிணந்திகழ் பல்ல பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி | 5. | விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர் | | களரி மருங்கிற் கால்பெயர்த் தாடி ஈம விளக்கின் வெருவரப் பேரும் காடுமன் னினரே நாடுகொண்ட டோரும் நினக்கும் வருதல் வை கலற்றே | 10. | வசையு நிற்கு மிசையு நிற்கும் | | அதனால், வசைநீ்க்கி யிசை வேண்டியும் நசைவேண்டாது நன்றுமொழிந்தும் நிலவுக்கோட்டுப் பலகளிற்றோடு பொலம்படைய மாமயங்கிட | 15. | இழைகிளர் நெடுந்தே ரிரவலர்க் கருகாது | | கொள்ளென விடுவை யயின் வெள்ளென ஆண்டுந் பெயர்ந்த பின்னும் ஈண்டுநீடு விளங்குநீ யெய்திய புகழே. |
திணை: அது. துறை : பெருங்காஞ்சி, அந்துவன்கீரனைக் காவிட்டனார் பாடியது.
உரை: பாறுபடப்பறைந்தபல்மாறு மருங்கின் - முற்றவும் கெட்டுத் தேய்ந்தமிந்த பல முட்கள் கிடக்கின்ற பக்கத்தில்; வேறுபடு குரல - வேறுபட்ட குரலினையும்; வெவ்வாய்க் கூகையொடு - வெவ்விய வாயையுமுடைய கூகையொடு கூடி; பிணந்தின் குறுநரி நிணம் திகழ் பல்ல - பிணங்களைத் தின்னும் குறுநரிகள் தசை யொட்டிய பற்களையுடையவாய்த் தின்றுகொண்டிருக்க; பேஎய் மகளிர் பிணம் தழூ உப்பற்றி - பேய்ப் பெண்டிர் பிணங்களைத் தழுவிப் பற்றிக் கொண்டு; விளர் ஊன் தின்றவெம்புலால் மெய்யர் - வெள்ளிய தசையைத் தின்றதனால் வெவ்விய புலால் நாறும் மெய்யினையுடையராய்; களரி மருங்கில் கால் பெயர்த்தாடி பிணம் வைத்துச் சுறாம் களர் நிலத்தில் காலைப் பெயர்த்து வைத்துக் கூத்தாடி ஆம விளக்கின் வெருவரப்பேரும் சுடுகாட்டுத் தீயின்கண் அச்சம்வர நீங்கும்; காடு - சுடுகாட்டை; நாடு கொண்டோரும் முன்னினர் பெரு நாடுகளை வென்ற முடி வேந்தரும் சென்றடைந்தனர், |