பக்கம் எண் :

316

     

வான்மீகையார் என்பது மழையினும் மேம்பட வழங்கும் வண்கையுடைய
வரென்று பொருள்படும். ஒரு பகலில் பலர் தலைவராகியவழி அவர்
தலைமையின் கீழ் எவர்க்கும் எத்துணையும் இன்பமில்லையாம். “எழுவ
ரென்றது ஒரு பகவலவைக்குள் இறந்த அரசர் ஒருவர்பின் னொருவராக
அரசெய்திய எழுவரைக் குறித்தது; எழுவர் “ஒரு குடியிரைல்லாத
எழுவரெனினுமைமையும்” என்று திரு. ரா. இராகவையங்கார் கூறுவர். தவம்,
துறவறத்துக்குச் சிறந்ததையின் வையம் இல்லறத்துக்குரியதாயிற்று. இல்வாழ்வில்
செய்வனவும் தவிர்வனவும் பொருள்மேற் பற்றின்றிக் கடனெனச் செய்தவழி,
திருமகள் செய்வோனை நீங்காது உறைவள் என்பார், “விட்டோரை விடாள்
திருவே” என்றார். திருமகள் தவத்தை விரும்புவளாதலால், தவத்தைக்
கைக்கொண்டு வையத்தைக் காதலியாது விட்டாரைத் திருமகள் தவம் பற்றி
விரும்பியுறைதலால், தவங் கைவிட்டு வையத்தைக் காதலிப்பாரை “இவள்
விடப்பட்டா” ரென்றார். “திரு இறைவன் அருட்சக்தியாதலின் பற்றறற்வர்
இறைவனருளாற் பற்றப்பட்டவ ரென்பதும், பற்றுவிடாதார் அருளாற்
பற்றப்படாது விடப்பட்டவரென் பதும், கருத்தாதல் கொள்க” என்று
திரு. ரா. இராகவையங்கார் கூறவர்.

359. அந்துவன் கீரன்

     அந்துவன் கீரன் என்பவன் ஒரு சிறந்த தமிழ்த் தலைவன்.
அந்துவன் என்பாற்கு மகனாதலின், இன் கீரன் அந்துவன் கீரன் எனக்
குறிக்கப் பெறுகின்றான். நல்லிசைச் சான்றோர்பால் பேரன்புடைய இவன்
அவர் சொல்வழி நின்று பெரும் பொருள்ஈட்டிச் சிறந்த புகழ் கொண்டு
விளங்கினான். ஆயினும், அவற்கு உலகியலிற் பெரும்பற்று உண்டாயிருந்தது.
அவன் வேட்கை பொருளீட்டற்கண் மிக்க ஊற்றமோடிருந்தது. அதனை மாற்றி
அவன் கருத்தைப் புகழ் பயக்கும் பெருந்துறையில் செலுத்தச்
சான்றோர் பலர் முயன்றனர். அவருள் காவிட்டனார் அவனை நெருங்கித்
தெருட்டற்கு வேண்டும் செவ்வி பெற்றார். அப்போது அவர் கூறக் கருதிய
அறவுரை இப் பாட்டாய் வெளிவருதாயிற்று.பெருநாடுகளை வென்று கொண்ட
முடிவேந்தாராயினோரும் முடிவில் முதுகாட்டை யடைந்தார்களே யன்றி
நிலைபெற இருந்தாரில்லை. நினக்கும் அவ்வாறு ஒருநாள் வருதல் தப்பாது;
இவ்வுலகில் இசையும் வகையுமே ஒப்ப நிற்பனவாம். ஆதலால் வசை நீக்கி
இசை நடுதலும், ஒருபாலும் கோடாது முறை வழங்குதலும், இரவலர்க்குக்
களிறும் மாவும் தேரும் பிறவும் கொள்ளெனக் கொடுத்தலும் செய்க;
செய்வாயாயின், நீ மேலுலகம் புக்க வழியும் நீ எய்தும் புகழ் இவ்வுலகம்
உள்ளவும் நிலைபெற நிற்குங்காண் என்று இப் பாட்டின் கண் அறிவுறுத்தி
யுள்ளார்.

     ஆசிரியர் காவிட்டனாரைக் கானட்டரென்றும் சில ஏடுகள் குறிக்கின்றன.
கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில். காவிட்டன் என்ற இப் பெயர்
கோயில்பட்டர்களிடையே பயில வழங்கியிருந்ததென்று சோழவந்தானுக்
கண்மையிலுள்ள தென்கரைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. “அதிஐய
மங்கலத்துகூ காவிட்டன. முத்தசீராமபட்டன; காவிட்டன் வடுகனாதித்தன்”
(S. I. I. Vol. V. No.294) என வருவது காண்க. களவுக் காலத்தில் தலைவி
தலைவனைக் காணப்போதில் எய்துந் துன்பத்தைப் பெருங்கால் நாடன் பிரிந்த
புலம்பும், உடன்ற அன்னை அமரா நோக்கமும், ஞாயிறு குடகடல்