| பண்பே யென்றும் கூறினார். முட்டுதல் - அஞ்சுவர வென்பது எது கையின்பம் குறித் வலித்தது. ஈமத்தில் எரிவாய் இடுவதன்முன், பிணத்தைப் பாடையின் நீக்கித்தருப்பையும் புன்மேற் கிடத்தி, எதிரே பரப்பப்பட்ட தருப்பையில் சோற்றை வைத்துப் புலயன் படைப்பன் என்பது. புல்லகத் திட்ட வல்சி புலையனேவப் புன்மேலமர்ந்துண்டென்பதனாற் பெற்றாம். பின்பு, போர்ப் புண்படாது நோயுற்றிறந்தாரை வாளாற் போழ்ந்து ஈமத்திடுவது பண்டை யோர் மரபு. வாய்த்தல். ஒழுக்கங்குன்றாது கொடையாற் பெறும் புகழ் வாய்த்தல். பருத்துண்டோர் என்று பாடமாயின், உண்டு பருத்தோர் கல்வி கேள்விகளால் உணர்வு பெருகாதோர் என்பதாம். சினத்தரும் கேள்வியரும் கொடைரும் தேறலரும் மொழியருமாகி, இந்நிலம் ஏமமாக ஆண்டோர் சிலர்; பெரும; இனி; கேள்; அஃது அறியாதோர் பலர்; அன்னோர் செல்வமும் நில்லா; பண்பு இன்னும் அற்று; அதனால் முட்டிலை, நிரப்பல் ஓம்புமதி; பகுத்துண்டோர் பலர் வாய்த்திரார் எனக் கூட்டி வினை முடிவு செய்க.
விளக்கம்: நிலையாமையறிந்து இந்நிலமாண்டோராகிய சிலரும், அறியாதார் பலருமாகிய இருதிறத்து வேந்தர் செல்வமும் நில்லாது; அதனால் நீ ஒழுக்கம் முட்டிலையாய் நிரப்பல் ஓம்புமதியென்பவர், இவ்வுண்மையறிந்து பகுத்துண்பவர் பலரும் செல்வமும் வாழ்வும் நிலை பெறப் பெறுவர் போலும் என்னும் ஐயமறுத்தற்குப் பலர் வாய்த்திரார் பகுத்துண்டோர் என்றார். இனி, தாம் உடையது பகுத்துண் போருள்ளும் ஒழுக்கமுட்டாது புகழ் வாய்ந்திருந்தவர் சிலரே; பலர் அது வாய்த்திரார் என வுரைப்பினுமமையும். இதற்குப் புகழ் என ஒருசொல் வருவித்துக் கொள்க. 361. கயமானர் அச்சுப்பிரதிகளில் இப்ாட்டைப்பாடின ஆசிரியர்பெயர் காணப்படவில்லை. கிடைத்த கையெழுத்துப்படியில் இப்பாட்டைப்பாடியவர் கயமனாரென்று குறிக்கப்பட்டிருந்தது; இடையிற் சிதைந்திருந்த அடிகள் நிறைவுற்றும் இருந்தன; ஆயினும், இதன் இறுதிப்பகுதி கிடைக்கவில்லை. அதனால் அக் கையெழுத்துப் படியை மேற்கொண்டே ஈண்டு உரையும் பிறவும் கூறப்படுகின்றன. இப்பாட்டின்கண் ஆசிரியர் கயமனார் செல்வச் சிறப்புமிக்க தலைவனொருவனைக் கண்டு நிலையாமையை அறிவுறுத்தி நன்னெறிபல எடுத்துரைப்பாராய்க் கூற்றுவனை நோக்கி, கூற்றமே, எங்கள் தலைவன், நின் வரவுக்கு அஞ்சுபவனல்லன்; அவன் அந்தணர்க்கு அருங்கலங்களை நீர் பெய்து தந்துள்ளான்; பலர்க்கும் தாயினும் சால்ப் பரிந்து அவர் வேண்டுவன பெரிதும் நல்கியவன்; தன் அருணிலைபாடும் புலவர் பொருநர் முதுலாயினார்க்குக் களிறும் மாவும் கொடுத்தவன்; தன் தாள் பணிந்து அன்பராகின்றவர்க்குப் பகைவர்களை வென்று பெற்ற பெருவளங்களைத் தந்தவன்; பாடினிக்குப் பொன்னரிமாலையும் பாணருக்குப் பொற்றாமரையும் அளித்தவன்; பொற்கலத்தில் தேறலேந்தி மகளிர் தரவுண்டு மகிழ்பவனாயினும், ஒருபொழுதும் யாக்கை செல்வ முதலியவற்றின் நிலையாமையியல்பை மறப்பதிலன். அவற்கு உலகவாழ்வின் நிலை யாமை நீ தெரிவித்தல் வேண்டா; அவன் யாவையும் முன்பேயறிந்து உணர்வன முழுவதும் உணர்ந்து கேட்பன தெளியக் கேட்டுச் சிறந்துளான் என்று கூறியுள்ளார். |