பக்கம் எண் :

323

     
 காரெதி ருருமி னுரறிக் கல்லென
ஆருயிர்க் கலமரு மாராக் கூற்றம்
நின்வர வஞ்சலன் மாதோ நன்பல
கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்
 5.கருங்கல நீரொடு சிதறிப் பெருந்தகைத்
 தாயி னன்று பலர்க்கீத்துத்
தெருணடை மாகளி றொடுதன்
உருணடைப் பஃறே ரொன்னார்க் கொன்றதன்
 10.தாள்சேருநர்க் கினிதீத்தும்
 புரிமாலையர் பாடினிக்குப்
பொலந்தாமரைப் பூம்பாணரொடு
கலந்தளைஇய நீளிருக்கையாற்
பொறையொடு மலிந்த கற்பின் மானோக்கின்
 15.வில்லெ விலங்கிய புருவத்து வல்லென
 நல்கி னாவஞ்சு முள்ளெயிற்று மகளிர்
அல்கு றாங்கா வசைஇ மெல்லென
கலங்கலந் தேறல் பொலங்கலத் தேந்தி
அமிழ்தென மடுப்ப மாந்தி யிகழ்விலன்
 20.நில்லா வுலகத்து நிலையா மைநீ
 சொல்ல வேண்டா தோன்றன் முந்தறிந்த
முழுதுணர் கேள்விய னாகலின்........
..................விரகி னானே.

         .............கயமனார் பாடியது.
 

     உரை: கார எதிர் உருமின் உரறி - கார் காலத்திற்றோன்றும் இடி
போல் சட்டெனத் தோன்றி; கல்லென -; ஆருயிர்க்கு அலமரும் ஆராக்
கூற்றம் - நிறைந்த உயிர்களை யுண்டற் பொருட்டுத் திரியும் நிரம்பாக்
கூற்றமே; நின் வரவு அஞ்சலன் - நின் வருகைக்கு அஞ்சுதல் இல்லான்;
நன்பல கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு - நல்ல பல நூல்களைக்
கேட்டு அறிவு நிரம்பிய வேள்வி செய்தலையுடைய அந்தணர்களுக்கு;
அருங்கலம் நீரொடு சிதறி - பெறற்கரிய பொற்கலங்களை நீர் வார்த்துக்
கொடுத்து; பெருந்தகை - பெரிய தகைமையையுடைய எம் தலைவன்;
தாயின் நன்று பலர்க்கு ஈத்து - தாயினும் பெரிய அன்புடையனாய்
இரவலர் பலர்க்கும் வேண்டுவன கொடுத்து; தெருள் நடை மா