| முதுமரத்தின் பொந்துகளிலிருந்து; கதுமென இயம்பும் கூகைக்கோழி ஆனா - கதுமெனக் கூவும் பேராந்தைகள் நீங்காத; தாழிய பெரும் காடெய்திய ஞான்றும் - தாழிகளையுடைய சுடுகாட்டையடைந்தபோது; பெரும பெருமானே; அரியவாகலும் உரிய - இவைகள் உண்ணப்படாவாம்; எ - று.
பொன்னாற் செய்த தமரைப் பூவுக்குக் கேணி பூவாத்தாமரைப் பெருமலர் என்றது வெளிப்படை எரிமருள் தாமரை யென்பது இனம் பற்றி வந்தது. மைவிடையிரும் போத்து - ஆட்டுக்கிடாய். காயம் - உறைப்பு. தீயிற் சுட்டவூனை வாயிற்பெய்து நாப்புடை பெயர்ப்ப இரு மருங்கினும் மென்று தின்னும் செயலை, காழிற் சுட்ட போழூன் கொழுங் குறை, ஊழி னூழின் வாய்வெய்தொற்றி (பொருந. 105-9) என்று பிறரும் கூறதல் காண்க. தாமே தமியருண்டலினும் இரவலர்க் கீத்துண்ணப் பிறக்கும் இன்பம் பெரிதாகலின், இரப்போர்க் கீய்ந்தும் என்றார். முதுகாட்டில் உள்ள மரங்களில் முதிவற்றிற் பொந்துகள் உளவாதல் பற்றி முதுமரப் பொத்து எனல் வேண்டிற்று. அப் பொந்துகளில் பேராந்தையும் கோட்டானும் வாழ்தல் கண்கூடு. கூகை கூவுதலைப் பிறரும் பொத்தவரையுட் போழ்வாய்க் கூகை, சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பிரும், கள்ளியம் பறந்தலை (புறம். 240) என்று கூறுவர். தாழி, ஈண்டுப் பிணங்களைக் கவிக்கும் தாழி; இவற்றை இக்காலத் தார் முதுமக்கள் தாழி யென்ப. மறப் போரோய், பெரும மகிழ்கம் வம்மோ; பெருங் காடெய்திய ஞான்று, அரியவாகலுமுரிய என்று கூட்டி வினைமுடிவு செய்க. எய்துஞான்றெனற்பாலதனை எய்தியவென இறந்த காலத்திற் கூறியது விரைவுக் குறிப்பு என அறிக.
விளக்கம்: நாளும் போருடற்றலும் பொருளீட்டலும் மேற் கொண்டு நிலவும் தானைத் தலைவன் ஒருவனைக் கண்டு அவன் கருத்தில் யாக்கை நிலையாமையையும், அது நின்றவழிச் செய்தற்குரியனவும் ஊறி நன்னெறிப்படுத்தும் கூகைக்கோழியார், செய்தற்குரியது இது வென முதற்கண் கூறலுற்று, பாடினிக்குப் பொன்னரி மாலையும், பாணர்க்குப் பொற்றாமரையும் நல்குக என்பார், பாடினி அணிய என்றும், பாணன் சென்னித் தாமரைப் பெருமலர ் தயங்க என்றும் கூறினார். பின்பு தின்றற்குரிய வூனும் உண்டற்குரிய நறவும் இரப்போரும் சுற்றத்தாரும் தின்றும் உண்டும் மகிழ்ச்சியுற அவரோடுடனுண் டின்புறுக என்பார், உண்டுந் தின்றும் இரப்போர்க் கீய்ந்தும் மகிழ்கம் வம்மோ என்றார். எந்நாளேனும் முதுகாடடைதல் ஒருதலையாதலால் பெருங்காடெய்திய ஞான்று என்றும் ஈத்துவக்கும் இன்பம் இறந்தபின் எய்தும் துறக்கவுலகில் இல்லை யென்றற்கு அரியவாகலும் உரிய என்றும் கூறினார். உம்மை இசை நிலை. ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன் கணவர் (குறள்; 1058. பரி. மேற்.) என்று சான்றோர் கூறுதல் காண்க. பெருங்காடென்ப தன் பொதுமை நீக்கத், தாழிய வெனச் சிறப்பித்தார். 365. மார்க்கண்டேயனார் காஞ்சி பாடிய புலவருள் இம் மார்க்கண்டேயனாரும் ஒருவர். நிலையாமை யுணர்வால் தவம் பூண்டு வாழும் அறவோர் வரிசையுள் நிற்கும் இச் சான்றோர், இப்பாட்டின்கண், விசும்பு முகமாக இரு சுடரும் |