கண்களாகக்கொண்ட நிலமாகிய மகள், முன்னோராகிய வேந்தர் பலர் மறையவும் யான் மறையாது உள்ளேனே என அழும் நிலையும் உண்டென அறிந்தோர் கூறுவர் என்று நிலையாமைப் பண்பை இனிமையுறக் கூறுகின்றார், மார்க்கண்டேயனாரைப்பற்றி குறிப் பொன்றும் கிடைத்திலது. இவர் பெயர் மாக்கடையனாரென்றும் பாடவேறுபாடு காணப்படுகிறது. | மயங்கிருங் கருவிய விசும்புமுக னாக இயங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடைய வழங்கா வழக்கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப் | 5. | பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப் | | பொருநர்க் காணாச் செருமிகு முன்பின் முன்னோர் செல்லவும் செல்லா தின்னும் விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண் | 10. | நிலமக ளழுத காஞ்சியும் | | உண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே. |
திணை: காஞ்சி, துறை: பெருங்காஞ்சி. மார்க்கண்டேயனார் பாடியது.
உரை: மயங்கு இருங் கருவிய விசும்பு முகனாக-தம்மிற் கலந்த மழை மின் முதலியவற்றின் தொகுதியையுடைய விசும்பை முகமாகவும்; இயங்கிய இருசுடர் கண்ணென - விசும்பின்கண் இயங்கும் ஞாயிறும் திங்களுமாகிய சுடர் இரண்டையும் கண்களாகக்கொண்ட; பன்மாண் நிலமகள் - பலவ கையாலும் மாண்புற்ற நிலமாகிய மகள்; பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் - இடம் விட்டுப் பெயர்தலையுடைய காற்று இயங்காத இடமாகிய எவ்வுயிரும் செல்லுதற்கரிய விசும்பைக் கடந்து; வயிரக் குறட்டின் வயங்குமணியாரத்து - வயிரத்தாற் செய்யப்பட்ட குறட்டின்கண் செறிந்து விளங்குகின்ற மணிகளாலாகிய ஆர்க்காலையுடைய; பொன்னந் திகிரி முன் சமத்துருட்டி - பொன்னாற் செய்யப்பட்ட ஆழிப்படையைப் போரின் முன்னே நின்று செலுத்தி; பொருநர்க் காணா பகைவரையழித்து - மேலே வரக்கடவ பகைவர் வரப்பெறாமையால; செருமிகு முன்பின் - போர்க்கண் மேம்பட்ட வலியினையுடைய; முன்னோர் செல்லவும் செல்லாது - முன்னுள்ளோராகிய வேந்தர் விண்ணுலகு செல்லக் கண்டுவைத்தும் உடன் செல்லாது; விலை நலப் பெண்டிரின் - தம் நலத்தைப் பிறர்க்கு விற்கும் மகளிர் போல; பலர் மீக்கூற - பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ; யான் இன்னும் உள்ளேன் வாழியர் - யான் இப்பொழுதும் நிலையாக இருக்கின்றேன், யான் வாழ்க; என - என்று; அழுத காஞ்சியும் |