| உண்டென - புலம்பிய காஞ்சியும் உண்டென்று; உணர்ந்திசினோர் உரைப்பர் - அறிவுடையோர் கூறுவர்; எ - று.
விசும்பு முகனாக கூடர் கண்ணாகக்கொண்ட நிலமகள் முன்னோர் செல்லவும் செல்லாது விலைநலப் பெண்டிரின் பலர் மீக்கூற யான் உள்ளேன் வாழியர் என அழுத காஞ்சியும் உண்டென உணர்ந்திசினோர் உரைப்பர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நில மண்டிலமும், நீர் மண்டிலமும், தீ மண்டிலமும், வளி மண்டிலமும், கடந்து நிற்கும் விசும்பு நீத்த மெனப்பட்டது. நில முதலாகிய மண்டிலங்களை நீத்து நிற்பது நீத்தமாயிற்று; இதன் கண் வளி வழங்குதலின்மையின், வளியிடை வழங்கா வழங்கருநீத்தமெனப்படு வதாயிற்று; குறடு, திகிரியின் நடுவிடமாகிய குடம். அதனகைச் சுற்றி ஆர்க்கால் செறிந்திருப்பது கொண்டு, இதனை ஆர் சூழ்குறடு (புறம். 283) என்று சான்றோர் வழங்குப. ஆர், ஆரம் என வந்தது. திகிரி, ஆழிப்படை. பொன்னாலாகிய திரிகியாதலின், வயிரமணியாற் குறடும் ஏனை மணிகளால் ஆரமும் அமைக்கப்பெற்றன வென்றறிக. விலைமகளிர் பெருளுடையார் பாற்சேர்வது போல, நிலமுகள் வலியும் சூழ்ச்சியுமுடைய வேந்தர்பால் தங்குதலின் விலைநலப் பெண்டிரின் என்றார். வாழியர்: எதிர்மறைக் குறிப்பு மொழி. பொறைக் கெல்லையாகிய நிலமகளும் நிலைாமை யுணர்ந்து பொறாது அழுதனளெனின் நாம் அதனை முன்னுணர்ந்து துறத்தலே சீரிது என்பது கருத்து.
விளக்கம்:வளிமண்டிலம் சூழவிப்பது ஞாலமாதலின் அதனைக் கடந்து. நிற்கும் விசும்பை நீத்மென்றாரென அறிதல் வேண்டும்; திருவள்ளுவரும், ஞாலத்தை வளிவழங்குமல்லன்மா ஞாலம் (குறள். 245) என்பது காண்க. விசும்பு நீத்தம் (புறம். 376) என்பதும் இக் கருத்தேபற்றி வந்தது. நிலனேந்திய விசும்பும் (புறம். 2) என நிலத்துக்கு மேலெல்லை கூறி, இடைப்பட்ட காற்றும், தீயும், நீரும் ஞாலத்தின் பகுதியாகச் சான்றோர் கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. விசும்பை முகமென்றலின், ஆண்டு நிலவும் இரு சுடரையும் நிலமகட்குக் கண்ணாகக் கூறினார். திகிரி யுருட்டிச் செங்கோலோபச்சி நிலவுலகு முற்றும் நெடிதாண்ட வேந்தரும் இறந்தாராயினும் தான் உடன் இறவாது நிற்பதுபற்றி, முன்னோர்செல்லவும் செல்லாது என்றுபரிந்து கூறகின்றார். நிலமகளை விலைமகட்கு ஒப்பக் கூறிய இக் கருத்தைத் தோலாமொழித்தேவர், மேற்கொண்டு தாம்பாடிய சூளமாணியில் முத்தி சருக்கத்தில், நிலமகணிலைமையும் நெறியிற் கேட்டிலேல், குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள், வளமிகு சூழ்ச்சியார் வழியள் மற்றவள், உலமிகு வயிரத்தோள் உருவத் தாரினீர் எனவும், தன்னுயிர் மணலினும் பலர்க டன்னலம், முன்னுகர்ந் திகந்தவர் மூரித் தானையீர் பின்னும்வந் தவரொடும் சென்று பேர்ந்திலள், இன்னுமஃ தவடன தியற்கை வண்ணமே எனவும், வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும், உற்றதோ ருரிமைகளில்லள் யாரொடும், பற்றிலள் பற்றினார் பால ளன்னதால், முற்றுநீர்த்துகிலுடை முதுபெண்ணீர்மையே எனவும், அடிமிசை யரசர்கள் வணங்க வாண்டவன், பொடிமிசை யப்புறம் புரள விப்புறம், இடிமுர சதிரவோ ரிளவ றன்னொடு, கடிபுகுமவளது கற்பின் வண்ணமே (சூளா. முத்தி 19-22) எனவும் கூறுதல் காண்க. |