பக்கம் எண் :

336

     

366. கோதமனார்

     இவரின் வேறுபடுத்தவே,  பல்யானைச்  செல்கெழு  குட்டுவனைப்
பதிற்றுப்பத்து  மூன்றாம்   பத்தைப்   பாடிச்  சிறப்பித்த  கோதமானர்
பாலைக்கோதமனார் எனப்பட்டனர். இவர் இப் பாட்டைத் தருமபுத்திரன்
பொருட்டுப் பாடியதாக அச்சுப்படியிற் காணப்படுகிறது. இப் பாட்டின்கண்
“இறவோன் மகனே” யென வந்திருப்பதுகொண்டு அதனைப் பிற்காலத்தார்
யாரோ தருமபுத்திரன் என் மொழி பெயர்த்துக் கொண்டனர். பாண்டவர்
தலைவனான தருமபுத்திரனே இப் பாட்டுடைத் தலைவனெனவும், மூன்றாம்
பத்தைப் பாடிய கோதமனாரே இவரெனவும் கருதுபவருமுண்டு. பாலை
பாடிய கோதமனாராயின், இப் பாட்டுடைத் தலைவன் பல்யானைச் செல்கெழு
குட்டுவனாதல் வேறொரு சேரமானாதல் வேண்டும். இப் பாட்டின்கண்,
ஆசிரியர் கோதமனார், “உலக முழுவதும் தமது ஒரு மொழியே வைத்து
உலகாண்ட பெருமையுடைய வேந்தரும் தம் புகழை நிறுவிவிட்டுத் தாம்
சென்று மாய்ந்தனர்; அதனால் யான்  உனக்கும்   ஒன்று   வரைப்பன்,
கேட்பாயாக; நின்வலியைப் பிறர் அறியாவகை காத்துக்கொண்டு, பிறர்
கூறுவனவற்றின் மெய்ம்மையைத் தெரிந்துணர்ந்து,பகற்போதில் ஆள்வினைக்
குதவி,இரவுப்போதில் மேல் செய்யக்கடவனவற்றை ஆராய்ந்து வினையாளரை
வினைக்கண் செலுத்துதல் வேண்டும். நின் மனயைிடத்தே மகளிர்தரும்
தேறலை   யுண்டுமகிழ்க;   சூட்டிறைச்சியும்   புழுக்கலுமாகிய   மடை
வேண்டுபவர்க்கு இலை யிலையாகத் தந்தும், சோறு வேண்டுபவர்க்குச்
சோறளித்தும் நீ உண்பாயாக; நீர்ாற்றடை கரையில் இழைத்த வெறியாடு
களத்து வீழ்த்தற் பொருட்டுத் தொகுத்த ஆடுகளைப்போல இறப்பது
உண்மை; அது பொய்யன்று” எனச் செய்வன செய்து நுகர்வன நுகர்ந்து
புகழ் நிறுவி மேம்படுமாறு அறிவுறுத்தியுள்ளார். இப் பாட்டின் இடைசேில
அடிகள் சிதைந்துள்ளன.

 விழுக்கடிப் பறைந்த முழுக்குரன் முரசம்
ஒழுக்குடை மருங்கி னொருமொழித் தாக
அரவெறி யுருகி னுரறுபு சிலைப்ப
ஒருதா மாகிய பெருமை யோரும்
 5.தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே
 அதனால், அறவோன் மகனே மறவோர் செம்மால்
நின்னொன் றுரைப்பக் கேண்மதி
நின்னூற்றம் பிறரறியாது
பிறர் கூறிய மொழி தெரியா
 10.ஞாயிற் றெல்லை யாள்வினைக் குதவி
 இரவி னெல்லை வருவது நாடி
உரைத்தி சின் பெருக்நன்றும்
உழவொழி பெரும்பக டழிதின் றாங்குச்
செங்கண் மகளிரொடு சிறுதுனி யளைஇ
 15. அங்கட் டேற லாய்கலத் துகுப்பக்