பக்கம் எண் :

337

     
 கெடலருந் திருவ வுண்மோ..........
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப
மடை வேண்டுநர்க் கடையருகா
தவிழ்வேண்டுநர்க் கிடையாருளி
20.நீர்நிலை பெருத்த வார்மண லடைகரைக்
  காவு தோறிழைத்த வெறியயர் களத்தின்
இடங்கெத் தொகுத்த விடையின்
மடங்க லுண்மை மாயமோ வன்றே.

     திணையும் துறையு மவை. ............கோதமனார் பாடியது.

     உரை: விழுக் கடிப்ப அறைந்த முழுக் குரல் முரசம் - பெரிய குறுந்
தடியால் அடிக்கப்பட்ட பெரு முழக்கத்தையுடைய முரசம்; ஒழுக் குடை
மருங்கின் - மறவொழுக்கமுடைய வீரரிடத்தே சென்று; ஒரு மொழித்தாக -
அரசாணை யென்ற ஒரு குறிப்பே தோன்ற; அரவு எறி உருமின் உரறுபு
சிலைப்ப - பாம்மை எறியும் இடி முழங்குவதுபோல முழங்க; ஒருதாமாகிய
பெருமையோரும் - பெருமையுடையோர்க்குக் தாம் எல்லையாகிய
பெருமையுடை வேந்தரும்; மஙஹபகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனர் - தங்கள்
புகழை நிறுவிவிட்டுத் தாம்மாண்டு மறைந்தனர்; அதனால்-; அறவோன் மகனே
- அறத்ததையுடைய வேந்தனுக்கு மகனே மறவோர் செம்மால் - வீரர்கட்குத்
தலைவனே; நின் ஊற்றம் பிறர் அறியாது - நின்னுடைய வலியைப் பிறர்
அறியாமலும்; பிறர் கூறிய மொழி தெரியா - நீர் கூறுவனவற்றின் உள்ளுறு
கருத்தை யறிந்துகொண்டும்; ஞாயிற்றெல்லை ஆள்வினைக் குதவி - ஞாயிறு
விளங்கும் எல்லையாகிய பகற்போதில் வினைசெய்வோர் பலரோடும் இருந்து
மறுநாள் செய்யக்கடவவற்றை யாராய்ந்தும்; உரைத்திசின் - வினைஞர்கட்கு
உரைப்பாயாக; பெரும் - பெருமானே; நன்றும் - பெரிதும்; ............ உழவு ஒழி
பெரும்பகடு அழிதின்றாங்கு ............ உழுதலைச் செய்து நீங்கிய பெரிய எருது
வைக்கோலைத் தின்றாற்போல; செங்கண் மகளிரொடு சிறுதுனி அளைஇ -
சிவந்த கண்ணையுடைய மகளிருடனே சிறிதாகியதுனி கலந்து; அங்கள்தேறல்
ஆம்கலத்து உகுப்ப - அழகிய கள்ளினது தெளிவை ஆராய்ந்து கலத்திற்
பெய்து தர; கெடல் அருந்திருவ - கெடுவதில்லாத செல்வத்தையுடையவனே;
விடைவீழ்த்துச் சூடு கிழிப்ப - ஆட்டுக்கிடாயையறுத்துச் சூட்டுக் கோலிற்
கோத்துச் சுட்ட சூட்டிறைச்சியைச் சமைத்து; மடைவேண்டுநர்க்கு
அடையருகாது -