| அகன்றலை வையத்துப் புரவலர்க் காணாது மரந்தலைச் சேர்ந்து பட்டினி வைகிப் போதவி ழலரி நாரிற றொடுத்துத் தயங்கிரும் பித்தை பொலியச் சூடிப் |
5. | பறையொடு தகைத்த கலப்பையென் முடிவுவாய் |
| ஆடுறு குழிசி பாடின்று தூக்கி மன்ற வேம்பி னொண்பூ வுறைப்பக் குறைசெயல் வேண்டா நசைய விருக்கையேன் அரிசி யின்மையி னாரிடை நீந்திக் |
10. | கூர்வா யிரும்படை நீரின் மிளிர்ப்ப |
| வருகணை வாளி................. ..................அன்பின்றுதலைஇ இரைமுரை சார்க்கு முரைசால் பாசறை வில்லே ருழவினின் னல்லிசை யுள்ளிக் |
15. | குறைத்தலைப் படுபிண னெதிரப் போர்பழித் |
| தியானை பெருத்தின் வாண்மட லோச்சி அதரி திரித்த வாளுகு கடாவின் மதியத் தன்னவென் விசியுறு தடாரி அகன்க ணதிர வாகுளி தொடாலிற் |
20. | பணைமரு ணெடுந்தாட் பல்பிணர்த் தடக்கைப் |
| புகர்முக முகவைக்கு வந்திசிற் பெரும களிற்றக்கோட் டன்ன வாலெயி றழுத்தி விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் குடர்த்தலை மாலை சூடி யுணத்தின |
25. | ஆனாப் பெருவளஞ் செய்தோன் வானத்து |
| வயங்குபன் மீனினும் வாழியர் பலவென் உருகெழு பேய்மக ளயரக் குருதித்துக ளாடிய களங்கிழ வோயே. |