பக்கம் எண் :

356

     

பெரும - பெருமானே; களிற்றுக் கோட்டன்ன வாலெயிறு அழுத்தி -
பன்றியின் கோடுபோன்ற வெள்ளிய பற்களாற் கடித்தீர்த்து; விழுக்கொடு
விரைஇய வெண்ணிணச் சுவையினள் - தசையொடு விசவிய வெள்ளிய
பொழுப்பைத் தின்று சுவை காண்பவளாய்; குடர்த்தலை மாலை சூடி -
குடர்களைத் தன் தலையில் மாலையாக அணிந்துகொண்டு; உணத் தின
ஆனா - யாம் சிரம்ப வுண்ணவும் தின்னவும் குறையாதவாறு; பெரு வளம்
செய்தோன் - மிக்க பிணங்களாகிய பெரிய வளத்தைக் கொடுத்தவனாகிய
இவ் வேந்தன்; வானத்து வயங்கு பன் மீனினும் பல வாழியர் என -
வானத்தின்கண் விளங்கும் பலவாகிய விண் மீன்களினும் பல்லாண்டுகள்
வாழ்வானாக என்று; உருகெழு பேம்கள் அயர - அச்சம் பொருந்திய பேய்
மகள் பாடிக் குரவைக் கூத்தாடி; குருதித் துகளாடிய களம் கிழவோய் -
குருதி யுலர்ந்து துகள்பட்ட போர்க்களத்தை யுரைமைகொண்டவனே; எ - று.


     சுவையினளாகிய பேய்மகள் வாழியர் பலவென அயர; துகளாடிய
களங்கிழவோய், பெரும, காணாது, வைகி, சூடி தகைத்த கலப் பையேனாய்,
நீந்தி உள்ளி, வந்திசின் என மாறிக் கூட்டி வினை முடிவுசெய்க. காவடியின்
ஒருதலையிற் கலப்பையும் ஒருதலையிற் பறையும் கட்டித் தூக்கிக் காவிச்
செல்லுவது தோன்றப் “பறையொடு தகைத்தகலப்பையென்” என்றான். கலப்பை
இசைக்கருவிகளை வைத்து கட்டும் பை. பித்தை தலைமயில். “அலரி,
சுரியிரும்பித்தை பொலியச் சூட்டி” (அகம். 213) என்று பிறரும் கூறுதல்
காண்க. சமைத்தற்குரிய மட்பானையைத் தனியே தோளிற் சுமந்து வருமாறு
விளங்க அதனைத் தனியாகக் கூறினான். பாடுற்ற வழி, பானை அசைந்து
உடைந்து போமாதலால், “பாடின்று தூக்கி” யெனல் வேண்டிற்று. வேம்பின் பூ
மழைத்துளிபோல் உதிர்தலின் “ஒய்பூ வுறைப்ப” என்றார். குறைசெயல்,
இன்றியமையாதசெயல். நசையவிக்கையேன் என்றற்கு வாளா இருத்தலை
விரும்பிய இருக்கை யுடையேன் என்றலுமாம். கடா விடுங்களம்,
கடாவெனப்பட்டது; கடாவிடுஞ் செயல் குறித்ததென்றுமாம். பணை,
வட்டமான வாயையுடைய ஒருவகைப் பறை; உரலெனினுமமையும். பிணர்,
சருச்சரை; இது வரி வரியாய்ப்பலவாயிருத்தலின், ‘பல்பிணர்’ என்றார்.
புகர்முக முகவை, வகரக்கிளவி யென்றாற் போல்வ தோராகு பெயர். களிறு,
பன்றி. விழுக்கு ஊன்வகையுள் ஒன்று. (சீவக;1584 உரை) உணத்தின,
உண்ணவும் தின்னவும். உண்டல் - விழுங்குதல்; தின்றல், மென்று உண்பது.
அயர்தல், ஈண்டுக் கூத்தின் மேனின்றது.

     விளக்கம்: போர்க்களம் பாடும் பொருநன் தான் வறுமையுற்று வருந்திய
வருத்தத்தை. புரவலர்க் காணாது பட்டினி வைகி, கலப்பை யேனாய்க்குழிசி
பாடின்று தூக்கி நசைய இருக்கையேனாய் ஆரிடைநீந்தி வருவேனாயினேன்
என்று முதற்கட் கூறுகின்றான். பாண்டியன் தலையாலங்கானத்துச்
செருவென்ற வெடுஞ்செழியன் போர்க்களத்திற்பகை வரை யெறிந்து
பிணக்குவை பெருகச் செய்த பெருமையைப் பின்பு