| | அலங்குளை யணியிவுளி | 5. | நலங்கிள்ளி நசைப்பொருநரேம் | | பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம் அவற்பாடுது மவன்றாள் வாழியவென நெய்குய்ய வூனவின்ற பலசோற்றா னின்சுவைய | 10. | நல்குவனின் பசித்துன்பற | | என்பநின் பொருநர் பெரும வதற்கொண்டு முன்னாள் விட்ட மூதறி சிறாஅரும் யானும், ஏழ்மணியங் கேழணி யுத்திக் கட்கேள்விக் கவை நாவின் | 15. | நிறனுற்ற வராஅப் போலும் | | வறனொரீஇ வழங்குவாய்ப்ப விடுமதி யத்தை கடுமான் றோன்றல் நினதே, முந்நீ ருடுத்த விவ் வியனுல கறிய எனதே, கிடைக்கா ழன்ன தெண்கண் மாக்கிணை | 20. | கண்ணகத் தியாத்த நுண்ணரிச் சிறுகோல் | | எறிதொறு நுடங்கி யாங்குநின் பகைஞர் கேட்டொறு நடுங்க வேத்துவென் வென்ற தேர்பிறர் வேத்தவை யானே. |
திணை: அது. துறை: கடைநிலை. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது.
உரை: கடற்படை அடல் கொண்டி - கடலிற் படை கொண்டு சென்று பகைவரை யடுதலாற் கெள்ளலாகும் பெரும் பொருள்; மண்டுற்ற மற நோன்றாள் - நெருங்கிப் பெருகிய மறம் பொருந்திய வலிய தாளையுடைய; தண் சோழநாட்டுப் பொருநன் - தண்ணிய சோழரது நாட்டில் வாழும் பொருநன்; அலங்குஉளை அணி இவுளி நலங்கிள்ளி - (யாங்கள்) அசைகின்ற தலையாட்டமணிந்த குதிரைகளையுடைய நலங்கிள்ளியது; நசைப் பொருநரேம் - விருப்பத்துக்குரிய பொருநராவோம். பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம் - பிற வேந்தரைப் பாடி அவர் ஒன்று தரப்பெறுவதை விரும்ப மாட்டேம்; அவன் தாள்வாழிய என - அவ னது முயற்சியால் நடைபெறும் அரசியல் வாழ்வதாக என்று; அவற்பாடுதும் - அவனையே பாடுவோம்; நெய் குய்ய ஊன் நவின்ற பல சோற்றான் -நெய்யால் தாளிதம் செய்யப்பட்ட வூன் கலந்த பலவகையான சோற்றுடனே; இன் சுவைய - இனிய சுவையுடைய பிற பொருள்களையும்; நின் |