பக்கம் எண் :

394

     

பிரிந்தோர், மனையகம் வந்து சேர்தல் வேண்டுமென விழைவது இயல்பாதலை,
“மழைகால் நீங்கிய மாக விசும்பின், குறுமுயன் மறுநிறங் கிறர மதிநிறைந்,
தறுமீன் சேரு மக லிரு ணடு நாள், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி,
பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுட னர வருகதில் அம்ம
(பிரிந்த காதலர்)” (அகம். 141) என்று சான்றோர் கூறுவது காண்க. “பெற்ற
பின்னரும் பெருவளன் ஏத்தி், நடைவயின் தோன்றிய விருவகை விடையும்”
(தொல். புறத்.30) என்றவிடத்து இருவகை விடையாவன: “தான் போதல்
வேண்டுமெனக் கூறுதலும், அரசன் விடுப்பப் போதலும்” என்றுரைத்துத்தான்
பிரிதல் வேண்டிக் கூறிதற்கு இளம்பூரணர் இப்பாட்டைக் காட்டுவர்.“தாவில்
நல்லிசை” (தொல். புறத். 36) என்ற சூத்திரத்தில், “பரிசில் கடை இய
கடைக்கூட்டுநிலை” என்பதில், “நிலையென் றதனானே பரிசில்பெறப் போகல்
வேண்டுமென்னும் குறிப்பும் பரிசில் நிலையும் பல்வகையாற் கூறுதல்
கொள்க” என்று ஓதி, இப் பாட்டை யெடுத்துக் காட்டி, “இது மேலும்
இக்காலத்தும் இங்ஙனம் தருவலென்றானெனக் கூறினமையின் அவன்
பரிசில்நிலை கூறிற்” றென்பர் நச்சினார்க்கினியர்.

382. சோழன் நலங்கிள்ளி

     சோழன் நலங்கிள்ளிபால் ஆசிரியர் கோவூர் கிழார் பேரன்புடையவ
ரென்பதை முன்பேகண்டுள்ளேம்.நலங்கிள்ளி சிறந்த போராண்மையும் மிகுந்த
கைவண்மையும் உடையன். ஒருகால் அவர் நலங்கிள்ளியிட மிகுந்த பொருநர்
சிலரைக் கண்டார். அவர்கள் வறுமைச் சிறுமையின்றி மிக்க மகிழ்ச்சியுடனி
ருந்தனர். அவர்களோடு கோவூர்கிழார் சிறிது போது உரையாடினார். பொருநர
் தலைவன் தான் சோழநாட்டு மறம்பாடும் பொருநன் என்றும், தானும் தன்
சுற்றததாரும் சோழன் நலங்கிள்ளியின் போர்க்களம் பாடும் பொருநர் என்றும்
கூறி, “யாங்கள் பாடினால் சோழன் நலங்கிள்ளியைப் பாடுவோமே யன்றிப்
பிறரைப் பாடுவதை விரும்ப மாட்டோம்; அவனையே பாடுவோம்; அவன்
முயற்சி வெல்க,” என்று சொல்லி, “அவன்பாற் செல்லின், நின்பசித்துன்பம்
நீங்க அவன் நெய்யிற் பொரித்தவூனும் பல்வகைச்சோறும் சுவையுடைய
பிறவும்நல்குவன்” என்று ஆற்றுப்படுத்தினர். இதனான் வியப்பு மிகக்கொண்ட
கோவூர்கிழார் சோழனையடைந்து, “பெரும, நின் பொருநர் இவ்வாறு
கூறுகின்றனர்; அதுகேட்டு நீ முன்னால் பரிசில் நல்கிச் செலவிட்ட
பொருநராகிய சிறாருடனே யான் வழிவினாய் வந்துள்ளேன். என்னைப்
பாம்புபோல் தீண்டி வருத்தும் வறுமை நீங்க, யானும் என்பால் வருவோர்க்கு
வழங்குதற் கேற்ப வளம் பல தந்து விடுவாயாக; இவ்வியனுலகு, பலரும் அறிய,
நினதே யாகும்; அவ்வாறே, இக்கிணைப்பறை எனதாகும். இக்கிணையின் கண்
சிறுகோலால் எறியுந்தோறும் நுடங்குவதுபோல் பிற வேந்தர் கேட்குந் தோறும்
உள்ளம் நுடங்குமாறு நின் மாண்புகழை அவர் அவைக்களஞ் சென்று அவர்
எதிரே நின்று பாடுவேன், காண், என்று கிணைப்பொருநன் ஒருவன் கூற்றில்
வைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார்.

 

கடற்படை யடற்கொண்டி
மண்டுற்ற மறனோன்றாள்
தண்சோழ நாட்டுப் பொருநன்