பக்கம் எண் :

393

     

ஈராப்பூட்கை - பெரிய கடைப்பிடியும் பிறரால் ஈர்த்து விலக்கப்படாத
கொள்கையையுமுடைய; கரும்பனூரன் காதல் மகன் - கரும்பனூர் கிழானுக்கு
அன்புடைய மகன்; எ - று.


     ஊனுணவும் நெல்லுணவும் மிகவுண்டலால் வெறுப்புணடாகிய வழி,
அதனை மாற்றப் பாற்பெய்து சமைத்த பாயசம் போல்வனவும்
வெல்லப்பாகுகொண்டு மிக்க இனிப்புச்சுவை கனிந்த பண்ணிகாரங்களும்
உண்பது கூறுவான், “பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்” என்றான்.
ஊனுஞ் சோறுந்தின்று பல்கூர்மை மழுகிக் கெட்டமை தோன்ற “அளவுபு
கலந்து மெல்லிது பருகி” யென்றார். மென்மையானவற்றைத் தின்றல்
நிகழுமாகலின். இருந்தன மென்றது, பன்னாள் இனி திருந்தமை புலப்படுத்தி
நின்றது. அறிவித்தனமென்பது அறியுந விடைவேண்டற்குக் காரணம் கூறுவான்,
“எம் விழவுடை நா” டென்றான். விழக்காலத்தில் பிரிந்தவர் தத்தம் ஊர்
மீளச்செல்லயுடையதாதல். முட்கள் நிறைந்த கொடிகள் பின்னிக் கிடக்கும்
புதரிடையே பூத்துக் கனிந்திருக்கும் பழங்கள் கொள்ளப்படாவாகலின்.
“பழமூழ்த்துப்பயம் பகர்வரிய மயங்கரில்” என்றார். மயங்கரில் ஊழ்த்த
பழமும் முதுபாழிற் பெய்த மழையும் பயன்படாதவாறு பாடும்பாட்டும்
பயன்படாவென்பது கருத்து. ஊன்சுதிர் - தோலின்கண் ஒட்டிக்கிடந்து
காய்ந்து கொருக்காக இருக்கும் ஊன்பிசிர் வலத்தல், தெற்றுதல். பாட்டிசை
முடுகுமிடத்துத் தாளத்தின் கடுமைக்கும் பாணி” யென்றும், அவ்வாற்றால்
பாட்டின் அமைதி குறைவுபடாமை தோன்ற “அரலையில் பாணி” யென்றம்
கூறினார். யாவது, ஈண்டு, இன்மை குறிந்து நின்றது. தெருமரல் உயக்கம்,
வள்ளிோர் உண்மை சூழ்ந்து அவரிருக்கும் இடநாடிப் பறவைபோலத்
திரிவதாற்பிறக்கும் துன்பம். அறிநை மறவாதொழிக. அறிதல், ஈண்டு
செய்ந்நன்றியறிதல் என்புழிப்போல நின்றது. கோள், கடைப்பிடி. கண்ணன்ன
கேளிர் வந்து விலக்கினும் விலகாத உரம்பற்றி, “ஈராப் பூட்கை” யென்றார்.
இருங்கேள் ஈராப் பூட்கை யென்றும் பாட வேறுபாடுண்டு. கலந்து, பருகி,
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனமாக, அறியுநமாக, நாடன், மகன், அஞ்சி,
தோன்றி, ஒற்றி, அகற்றல் யாவது; தீர்க்குவெம், அதனால் கிணைவ,
சேயையாயினும் இவணையாயினும், அறிநை படர்க என்றானெனக் கூட்டி
வினை முடிவுசெய்க.

      விளக்கம்: கரும்பனூர்  என்னும்  தொண்டைநாட்டூர் இப்போது
கரும்பூர்   என  வழங்குகிறது.    ஊனும்...ஊணும்   விருந்துறுத்தாற்றி
யிருந்தெனமாக” என்பது கரும்பனூர்கிழான் கிணைப்பொருநர்க்குச் செய்த
விருந்தின் சிறப்புணர்த்தி நிற்கிறது; கரும்பனூர்கிழான் கிணைவனுக்கு
விடைதருங்கால், நீவிர் ஈயா மன்னர் புறங்கடைத்தோன்றி, அரலையில்
பாணியின் இலம்பா டகற்றல் யாவது, புலம்பொடு தெரு மரல் உயக்கமும்
தீர்க்குவெம்; இலம்பாடு உற்றவழி இவணையாயினும் சேயையாயினும் எம்பால்
வருக என்பான், “இதற்கொண்டறிநை” என்பது, அவனது வேளாண்மையை
விளக்கி நிற்கிறது. இனி விழவு தோன்றிய காலத்துப்